[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தார் பி.வி.சிந்து.
  • BREAKING-NEWS வேதாரண்யத்தில் இரண்டு தரப்பினரிடையே மோதல்: காவல்நிலையம் மீது கல்வீச்சு
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் கங்கையம்மன் கோயில் குளத்தில் கிடந்த மர்மப் பொருள் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு.
  • BREAKING-NEWS தமிழகத்தில் எந்த விதத்திலும் தீவிரவாதம் தலைதூக்க முடியாது: ஜெயக்குமார்
  • BREAKING-NEWS அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

2 மாத கோடை கால விடுமுறைக்கு பின் குழந்தைகளை பள்ளிக்கு செல்ல தயார்படுத்தும் திட்டம்

how-to-ready-school-students-before-reopening

2 மாத கோடை கால விடுமுறையில் இருந்து மீண்டும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை, பள்ளி திறக்கும் முன்னரே அந்த மனநிலைக்கு கொண்டு வரும் முயற்சியாக துபாயில் புதிய திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

மேற்கத்திய கல்வி வழிமுறைகளில் ஒன்றாக கருதப்படும் ‘விஸ்டம் வேர் ஹவுஸ்’ , என்ற திட்டத்தை அமீரக கல்வி அமைச்சகம் தொடங்கியுள்ளது. 2 மாத கோடை கால விடுமுறையில் இருக்கும் குழந்தைகள், கல்வி ஆண்டு தொ‌டங்கும் முன்னர் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை இந்த பயிற்சி முகாமில் பங்கேற்று, கல்வி பயிலும் மனநிலைக்கு தயாராகும் விதத்தில் இந்த முகாம் நடத்தப்படுகிறது.

முதல் வகுப்பு தொடங்கி ‌5ஆம் வகுப்பு வரை உள்ள குழந்தைகள் இந்த திட்டத்தில் பயன்பெறுகின்றனர். வாசிப்பு, எழுதுதல், பள்ளி செல்ல தங்களை தயார்படுத்துதல் போன்ற பயிற்சிகள் மாணவ மாணவிகளுக்கு அளிக்கப்படுகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் போது மாணவர்கள் அதற்கான மனநிலையோடு செல்வார்கள் என கூறுகிறார்கள் கல்வியாளர்கள். செப்டம்பர் 21 ஆம் தேதியுடன் முடியும் இந்த முகாமில், பெற்றோரின் வசதிக்கு ஏற்ப குழந்தைகளை சேர்த்து கொள்ளலாம் என அமீரக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close