[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்ற கோத்தபய ராஜபக்ச நவ.29 இந்தியா வருகை
  • BREAKING-NEWS ரஜினி, கமல், விஜய் சேர்த்து வந்தாலும் அதிமுக சிங்கிளாக எதிர்க்கும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS மக்களின் நலனுக்காக கமலுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவேன் - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS அவசியம் ஏற்பட்டால் நானும், ரஜினியும் இணைவோம் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்
  • BREAKING-NEWS உள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

இந்த ஓவியம் ரூ.177 கோடியா? - ஹாங்காங்கில் விற்பனை!

cartoon-girl-painting-by-japanese-artist-sells-for-177-crore

ஜப்பான் ஓவியர் வரைந்த பெண் குழந்தையின் கார்ட்டூன் ஓவியம் ஹாங்காங் ஏலத்தில் ரூ.177 கோடிக்கு ஏலம் போனது.

சீனாவின் ஹாங்காங் நகரில் ஓவியம் தொடர்பான ஏலம் நடைபெற்றது. இதில் ஜப்பான் ஓவியக்கலைஞர் யோஷிடோமா நரா வரைந்த ஓவியமும் இடம்பெற்றது.

Knife Behind Back என்ற பெயரில் வரையப்பட்ட சிறுமியின் கார்ட்டூன் ஓவியமான அது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பெரிய கண்களுடன் முறைத்து பார்ப்பது போல நிற்கும் சிறுமியின் ஒரு கை மட்டுமே வெளியே தெரியும். மற்றொரு கை முதுகுபுறமாக மறைத்து வைத்திருப்பது போல தோன்றும். ''அந்தச் சிறுமி தன் முதுகுக்கு பின்னால் மறைத்து வைத்திருக்கும் கையில் என்ன வைத்திருப்பாள்?'' என்ற கேள்வியுடன் ஏலம் தொடங்கியது. 

ஏலம் தொடங்கி, 10 நிமிடத்திற்குள் அந்த ஓவியம் 25 மில்லியன் டாலர்களுக்கு ஏலம் போனது. இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.177 கோடி ஆகும். 6 பேர் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் கேட்டனர். இறுதியில் ஏலம் அறிவித்த தொகையை விட 5 மடங்கு அதிகமான விலையில் சிறுமியின் ஓவியம் ஏலம் போனதாக ஏல ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நவம்பரில் நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஓவிய ஏலத்திலும் யோஷிடோமாவின் ஓவியம் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close