[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் எடப்பாடி பழனிசாமி

cm-palanisamy-depart-america

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது அரசுமுறை பயணத்தின் இரண்டாவது கட்டமாக இங்கிலாந்தில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

நியூயார்க் செல்லும் அவர், அங்கு அமெரிக்கத் தமிழ்த் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்க தொழில் முனைவோர் பிரதிநிதிகளை சந்திக்கிறார். அமெரிக்க வாழ் தமிழர்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடவுள்ளார்.

சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைக்கப்படவுள்ள உலகத்தரம் வாய்ந்த கால்நடைப் பூங்காவுக்குத் தேவைப்படும் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வதற்காக, பஃபல்லோ மற்றும் கலிஃபோர்னியாவில் உள்ள கால்நடைப் பண்ணைகளைப் பார்வையிடுகிறார். அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பும் வழியில், வரும் 8, 9 ஆகிய தேதிகளில் துபாயில் தொழில் முனைவோர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து வரும் 10-ஆம் தேதி தமிழ்நாடு திரும்புகிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close