[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS எங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS மக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.
  • BREAKING-NEWS 2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி

பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்?

who-is-the-next-britain-prime-minister

பிரிட்டனின் அடுத்த பிரதமராக தற்போதைய உள்துறை அமைச்சர் தெரசா மே-விற்கு ஆதரவு பெருகுகிறது.

பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சர் மைக்கேல் ஃபாலனும், போக்குவரத்துத் துறை அமைச்சர் பேட்ரிக் மெக்லாக்லினும் தெரசா மேவே பிரிட்டனை சிறப்பாக வழிநடத்தத் தகுதியானவர் எனக் குறிப்பிட்டுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது, குடியேற்றங்களை குறைப்பது மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட சவாலான பணிகளை செய்யும் திறன்படைத்த‌ர் தெரசா மே என்று மைக்கேல் ஃபாலன் கூறியுள்ளார்.

பிரிட்டனின் அடுத்த பிரதமர் ஐரோப்பிய யூனியனு‌டன் சிறப்பான உடன்பாட்டை ஏற்படுத்தும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும் அந்த வகையில் தெரசா மே-சிறந்த தலைவராக செயல்பட இயலும் என மெக்லாக்லின் குறிப்பிட்டுள்ளார். பிரிட்டனின் அடுத்த பிரதமராகும் போட்டியில் ஐந்து பேர் உள்ள நிலையில் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரசா மே-க்கு கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கன்சர்வேடிவ் கட்சியின் 329 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற போட்டியில் உள்ள அனைவரும் முயன்று வருகின்றனர். முதல் கட்ட வாக்குப்பதிவில் குறைந்த எண்ணிக்கையிலான நபர் போட்டியிலிருந்து நீக்கப்படுவார். இறுதி வாக்கெடுப்பில் வெற்றி பெற்றவர் விவரம் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி அறிவிக்கப்படும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close