[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

பிறநாடுகளின் இறையாண்மையை மதிப்போம் : இந்தியாவுக்கு சீனா ஆதரவு

china-support-india-on-kashmir-issue

காஷ்மீர் விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், பிறநாடுகளின் இறையாண்மையை மதிப்பதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 3 நாட்கள் பயணமாக சீனா சென்றுள்ளார். பயணத்தின் ஒரு பகுதியாக, சீன துணை அதிபர் வாங் கிஷனை சந்தித்த அவர், பின்னர் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருநாடுகள் இடையிலான உறவு, வர்த்தகம் உள்ளிட்டவற்றை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். 

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் எவ்வித பிரச்னையும் இல்லை என்றும் அவர் கூறினார். இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு அளிக்கிற வகையில் சீனாவும் உறுதி அளித்தது. அதாவது பிறநாடுகளின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடுகளை மதிப்பதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ கூறினார். பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் சீன வெளியுறவு அமைச்சரை சந்தித்த பிறகு வெளிவந்துள்ள சீனாவின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close