[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS முன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க இருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்; தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS ரியோ பராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு

50 ஆண்டுகளாக கடலில் மிதந்த கடிதம் உரியவரிடம் சேர்ந்தது எப்படி?

australian-boy-who-found-50-year-old-message-to-reach-sender

ஐம்பது வருடத்துக்கு முன் பாட்டிலுக்குள் அடைத்து வீசப்பட்ட கடிதம், சம்பந்தப்பட்ட நபருக்கு சமீபத்தில் கிடைத்து, இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள தலியா பகுதியை சேர்ந்த 9 வயது சிறுவன் ஜியா எலியட். இவன், அங்குள்ள கடற்கரை மணலில் புதைந்து கிடந்த பாட்டில் ஒன்றை பார்த்தான். அதை எடுத்தவனுக்கு ஆச்சரியம். பாட்டிலுக்குள் ஒரு கடிதம் இருந்தது. இதுபற்றி தந்தை பால் எலியட்டிடம் சொன்னான். பின் பாட்டிலை உடைத்து அந்தக் கடிதத்தை பிரித்தான். அது, 1969 ஆம் ஆண்டு அப்போது 13 வயதாக இருந்த பால் கில்மோர் என்ற சிறுவன் எழுதிய கடிதம். 

கடிதத்தில், ‘எனது பெயர் பால் கில்மோர். 13 வயது. இங்கிலாந்தில் இருந்து பேர்ஸ்டார் என்ற கப்பலில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு சென்றுகொண்டிருக்கிறேன். இதைக் காண்பர்கள் எனக்கு பதில் எழுதவும்’’ என்று கூறப்பட்டிருந்தது. 

இதைப் பார்த்த சிறுவன் எலியட், கடிதத்தை எழுதியவரை கண்டுபிடிக்க முடியுமா? என்று தந்தையிடம் கேட்டுள்ளான். சமூக வலைத்தளங்கள் இருக்கும்போது கவலை எதற்கு? என்று களத்தில் இறங்கினார் அவன் அப்பா. 

சமூக வலைத்தளங்களில் இந்த தகவலை பதிவு செய்து, அந்த பால் கில்மோரை தேடினார். இந்த தகவல், அதிகமாக ஷேர் ஆனது. கடைசியில் அது, கடிதத்தை எழுதிய கில்மோருக்கே சென்று சேர, இன்ப அதிர்ச்சி அவருக்கு.

’’ஆஸ்திரேலியாவில் 4 வருடங்கள் இருந்தோம். பிறகு இங்கிலாந்துக்கு திரும்பி விட்டோம். இந்தக் கடிதத்தை விளையாட் டாக எழுதி கடலில் வீசினேன். சமீபத்தில்தான் என் மனைவியிடம் இதுபற்றி கூறிக்கொண்டிருந்தேன். 50 வருடத்துக்குப் பின் இப்போது அந்தக் கடிதத்துக்கு பதில் வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்கிறார் பால் கில்மோர். ஆங்கில ஆசிரியராக இருந் து ஓய்வு பெற்றிருக்கிறார் கில்மோர்.

(பால் கில்மோர் மனைவியுடன்)

சிறுவன் எலியாட்டின் அம்மா கர்லா கூறும்போது, ‘’அந்தக் கடிதத்தை எழுதியவரை 50 வருடம் ஆன நிலையில் கண்டுபிடிப் போம் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. இது வியப்பாக இருக்கிறது. இந்த மகிழ்ச்சியை எப்படி சொல்வதென்று தெரிய வில்லை’’ என்று கூறியுள்ளார்.

சிறுவனின் தந்தை பால் எலியாட் கூறும்போது, ‘’அந்தக் கடிதத்தைக் கண்டதுமே அது ஸ்பெஷல் என்பதை முடிவு செய்தேன்’’ என்று தெரிவித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close