[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

ஜப்பானில் மர்ம நபர் தாக்கி 2 பேர் பலி: பள்ளிக்குழந்தைகள் உட்பட 19 பேர் படுகாயம்!

girl-killed-at-least-15-school-children-hurt-in-japan-stabbing-spree

ஜப்பானில் மர்ம நபர் ஒருவர் வெறிகொண்டு கூட்டத்தில் கத்தியால் பலரை தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். பள்ளிக்குழந்தைகள் உட்பட 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஜப்பானின், கவாசாகி நகரின் நோபோரிடோ பகுதியில் உள்ள ரயில்வே ஸ்டேஷன் அருகே, சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கையில் கத்தியுடன் நின்று கொண்டிருந்தார். அருகில் பேருந்து நிறுத்தம். உள்ளூர் நேரப்படி இன்று காலை வேலைக்குச் செல்பவர்கள், பள்ளிக்குச் செல்பவர்கள், என அந்த சாலை பரபரப்பாக இருந்தது. அப்போது பள்ளி பேருந்துக்காக, ஏராளமான குழந்தைகள் அங்கு காத்திருந்தனர். அவர்கள் அனைவரும் ஆறு அல்லது ஏழு வயது குழந்தைகள் எனக் கூறப்படுகிறது.

அப்போது அந்த மர்ம நபர் திடீரென்று தான் வைத்திருந்த கத்தியால் அங்கு சென்றுகொண்டிருந்தவர்களை சரமாரியாக குத்தத் தொடங்கினான். இதனால் அந்தப் பகுதியில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர். அந்த மர்ம நபர் குழந்தைகளையும் விடவிவில்லை. அந்த பச்சிளங்குழந்தை கள் மீதும் கத்தியால் குத்தினான். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதற்கிடையே அந்த மர்ம நபரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவர் தன்னைத்தானே கழுத்தில் குத்தி சாய்ந்து விழுந்தார். அவரும் கத்திக் குத்தில் காயமடைந்த இளம் பெண் ஒருவரும் உயிரிழந்துவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து இரண்டு கத்திகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை நடந்து வருகிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close