[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
  • BREAKING-NEWS ஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ கதையை கூறிய ஸ்பாய்லருக்கு தியேட்டரிலேயே சரமாரி அடி!

man-in-china-beaten-up-outside-a-cinema-hall-after-he-gave-avengers-endgame-spoilers

‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ ஸ்பாய்லரை தியேட்டருக்கு வெளியே இழுத்து வந்து சக பார்வையாளர்கள் தாக்கிய சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த திரைப்படம் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’. இந்தப் படம் ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் உலகையே காப்பாற்றும் சர்வ வல்லமை படைத்த ஒட்டுமொத்த சூப்பர் ஹீரோக்களையும், அலறவிட்ட மெகா வில்லன் தானோஸ் கொல்லப்பட்டனா? என அவெஞ்சர்ஸ் படம் தொடங்கிய காலகட்டதிலிருந்து ரசிகர்களுக்குள் இருந்த எல்லாக் கேள்விகளுக்கும் இப்படம் விடை சொல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்தப் படம்  உலகம் முழுவதும் திரையரங்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இதற்காக காத்திருந்த ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் படம் பார்க்க காத்திருக்கும் ரசிகர்களுக்கு பெரிய தலைவலியாக இருப்பது 'ஸ்பாய்லர்ஸ்'. படம் பார்த்தவர்கள் ஆர்வம் தாங்காமல் படத்தில் முக்கிய திருப்பங்களை சமூக வலைதளங்களில் சொல்லி விடுகிறார்கள். அல்லது திரையரங்குக்குள் அமர்ந்துகொண்டு கதையை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்ட ஸ்பாய்லர்களால் புதிதாக படம் பார்ப்பவர்களுக்கு வெறுப்பு தான் உண்டாகிறது.

இந்நிலையில் சீனாவில் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ படத்தின் கதையை சொல்லிகொண்டே வந்த ஸ்பாய்லரை, தியேட்டருக்கு வெளியே இருந்த சக பார்வையாளர்கள் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

சீன ஊடகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சீனாவின் ஹாங் காங்கில் உள்ள தியேட்டரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தியேட்டரில் இருந்து படம் பார்த்துவிட்டு வெளியே வந்த நபர், படத்தின் திருப்பங்களை சொல்லிக்கொண்டே வந்துள்ளார். இதனால் அடுத்த காட்சி படம் பார்க்க காத்திருந்த சக ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர். அந்த நபரை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இது தொடர்பான புகைப்படமும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close