[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது? - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS திருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்
  • BREAKING-NEWS தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்

இவர் ஒரு நல்ல திருடன்- சீனாவில் நிகழ்ந்த சுவாரஸ்ய சம்பவம்

a-robber-returned-the-money-he-robbed-from-a-woman-in-china

சீனாவில் பணம் பறித்தவர் மனம் மாறி அதை திரும்ப ஒப்படைத்த சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

கடந்த மாதம் 16ஆம் தேதி சீனாவின் ஹேயூஹான் நகரில் உள்ள ஐசிபிசி வங்கி ஏடிஎம்மில் லீ என்ற பெண்  பணம் எடுத்துள்ளார். அப்போது அங்கு நுழையும் நபர் ஒருவர் கத்தியைக் காட்டி லீயை மிரட்டு அவர் எடுத்த பணத்தை பிடிங்கிக்கொள்கிறார். மீண்டும் அந்த பெண்ணை மிரட்டும் அந்த நபர், வங்கிக்கணக்கில் உள்ள மீதிப்பணத்தையும் எடுத்துத்தரக்கோரி கேட்கிறார். 

வங்கி கணக்கில் எவ்வளவு இருப்பு இருக்கிறது என்பதையும் காட்டச் சொல்கிறார். அவசரம் அவசரமாக லீ தனது வங்கிக்கணக்கு இருப்புதொகையை காட்ட லீயின் வங்கிக் கணக்கில் பணமே இல்லை என ஏடிஎம் இயந்திரம் காட்டுகிறது. 

வங்கிக்கணக்கில் பணமில்லாததை அறியும் அந்த மர்ம நபர், உடனே மனம் மாறி தான் பறித்த பணத்தை மீண்டும் அந்த பெண்ணிடமே ஒப்படைத்துவிட்டு சிரித்தபடியே அங்கிருந்து புறப்பட்டுச் செல்கிறார். 

ஏடிஎம்மில் உள்ள சிசிடிவியில் பதிவான இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 'இவர் ஒரு நல்ல திருடன்’ என்றும், 'இரக்க குணம் படைத்த திருடன்' என்றும் பலரும் பதிவிட்டு வருகின்றனர். சிசிடிவி பதிவை வைத்து அந்த மர்ம நபரை சீன போலீசார் கைது செய்துள்ளனர்.

வீடியோ: 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close