[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

இன்ஸ்டாகிராமில் அதிக லைக் வாங்கிய சாதாரண முட்டை புகைப்படம் 

photo-of-an-egg-beats-kylie-jenner-s-record

அமெரிக்க தொலைக்காட்சி நடிகையும், மாடலுமான க்ய்லை ஜெனரின் (Kylie Jenner) இன்ஸ்டாகிராம் லைக் சாதனையை ஒரு சாதாரண முட்டையின் புகைப்படம் முறியடித்துள்ளது.

அமெரிக்க தொலைக்காட்சி நடிகையும், மாடலுமான க்ய்லை ஜெனர் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். 123 மில்லியனுக்கும் அதிகமான பேர் இவரை பிந்தொடர்கிறார்கள். கடந்த 2018ம் ஆண்டு தன் குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்தார். அது 18 மில்லியனுக்கும் அதிகமானோரால் லைக் செய்யப்பட்டது. அதிக லைக் செய்யப்பட்ட புகைப்படம் என்ற சாதனையையும் அது படைத்தது. 

இந்நிலையில் அந்தச் சாதனையை முறியடிக்க நினைத்த யாரோ ஒருவர் ''வேல்ட் ரெகார்டர் எக்'' என்ற பக்கத்தின் மூலம் ஒரு முட்டையின் புகைப்படத்தை பகிர்ந்து ''க்ய்லை ஜெனரின் சாதனையை நாம் முறியடிக்க வேண்டும்'' என்ற தலைப்புடனே பகிர்ந்தனர். அந்த முட்டை புகைப்படம் குறித்த தகவலை பலரும் பகிர, அது தற்போது 25மில்லியனுக்கும் அதிகமானோரால் லைக் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் நிமிடத்துக்கு நிமிடம் அதன் லைக்கும் அதிகரித்து வருகிறது. தற்போது இன்ஸ்டாவில் அதிக லைக்குகளை பெற்ற புகைப்படம் என்ற சாதனையை அந்தச் சாதாரண முட்டை பெற்றுள்ளது. இந்தச் சாதனைக்காக நன்றி தெரிவித்த அந்த‘வேல்ட் ரெகார்டர் எக் பேஜ்’, ஏன் க்ய்லை ஜென்னரின் சாதனையை முறியடிக்க நினைத்து இந்த நடவடிக்கையில் இறங்கியது என்று தெரிவிக்கவில்லை.

தனது சாதனையை ஒரு சாதாரண முட்டை முறியடித்துள்ளது பற்றி க்ய்லை ஜென்னர் வீடியோ மூலம் பதிலளித்துள்ளார். என்னுடன் மோதினால் என்னாகும் என்பது போல ஒரு முட்டையை சாலையில் உடைத்து வீசி அந்தச் சின்ன முட்டையை எடுத்துக்கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். க்ய்லை ஜெனரின் அந்த வீடியோவும் தற்போதும் வைரலாக பரவி வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close