[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

கோல்டன் குளோப் விருது 2019 : வெற்றி பெற்றவர்களின் முழு விவர பட்டியல்

golden-globe-awards-2019-full-winners-list

திரைத்துறையில் ஆஸ்கர் விருதுக்கு அடுத்த இடத்தில் இருப்பது தான் கோல்டன் குளோப் விருது. சிறந்த ஹாலிவுட் படங்கள் மற்றும் சிறந்த அமெரிக்க தொலைக்காட்சி தொடர்களில் சிறந்த பங்களிப்பு மற்றும் படைப்புகளை வழங்கிய நட்சத்திரங்களுக்கு இந்த கோல்டன் குளோப் விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களின் முழு விவர பட்டியலை பார்ப்போம்.

இசை அல்லது நகைச்சுவை வடிவிலான சிறந்த திரைப்படமாக - கிரீன் புக்

நாடக வடிவிலான சிறந்த திரைப்பட நடிகர் - ரமி மாலிக், போஹ்மியன் ரஃப்சோடி

நாடக வடிவிலான சிறந்த திரைப்பட நடிகை - க்ளென் க்ளோஸ், தி ஒயிஃப்

சிறந்த துணை நடிகர் - மஹர்ஷலா அலி, கிரீன் புக்

சிறந்த துணை நடிகை - ரெஜினா கிங், இஃப் பீல் ஸ்ட்ரீட் குட் டாக்

இசை அல்லது நகைச்சுவை வடிவிலான சிறந்த நடிகர் - கிரிஸ்டியன் பேல், வைஸ்

இசை அல்லது நகைச்சுவை வடிவிலான சிறந்த நடிகை - ஒலிவியா கோல்மன், தி ஃபேவரட்

சிறந்த இயக்குநர் - அல்போன்சோ காரோன், ரோமா

சிறந்த பாடல் - “ஷல்லோ”, ஏ ஸ்டார் இஸ் பார்ன்

சிறந்த அனிமேஷன் படம் - ஸ்பைடர் மேன்: இண்டூ தி ஸ்பைடர் - வெர்ஸ்

சிறந்த திரைக்கதை ஆசிரியர் - பீட்டர் ஃபெரெல்லி, நிக் வெல்லேலோங்கா, - கிரீன் புக்

சிறந்த வெளிநாட்டு திரைப்படம் - ரோமா

வாழ்நாள் சாதனையாளர் விருது - கரோல் பர்னெட்

இசை அல்லது நகைச்சுவை வடிவிலான சிறந்த தொலைக்காட்சி தொடர் - தி கோமின்ஸ்கை மெத்தேடு

நாடக வடிவிலான சிறந்த தொலைக்காட்சி தொடர் - தி அமெரிக்கன்ஸ்

தொலைக்காட்சி தொடரின் சிறந்த நடிகர் - ரிச்சர்ட் மாடன், பாடிகார்ட்

தொலைக்காட்சி தொடரின் சிறந்த நடிகை - சந்த்ரா ஓ, கிள்ளிங் ஈவ்

சிறந்த தொலைக்காட்சி குறுந்தொடர் (அ) திரைப்பட பாணியிலான டி.வி. தொடர் நடிகர் - டாரன் கிரைஸ்

சிறந்த தொலைக்காட்சி குறுந்தொடர் (அ) திரைப்பட பாணியிலான டி.வி. தொடர் நடிகை - பேட்ரிஸியா ஆர்க்யூட்டி, எஸ்கேப் அட் டேன்மோரா

இசை அல்லது நகைச்சுவை வடிவிலான சிறந்த தொலைக்காட்சி தொடர் நடிகை - ரேஷல் புரோஸ்னகன், தி மார்வலஸ் மிஸ்டர்ஸ் மைசல்

இசை அல்லது நகைச்சுவை வடிவிலான சிறந்த தொலைக்காட்சி தொடர் நடிகர் - மைசல் டாக்லெஸ், தி கோமின்ஸ்கை மெத்தேடு

சிறந்த தொலைக்காட்சி குறுந்தொடர் துணை நடிகை - பேட்ரிஸியா ஆர்க்யூட்டி, ஷார்ப் ஆப்ஜெக்ட்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close