[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

மோடியின் நூலகத்தால் என்ன பயன் ? - கிண்டலடித்த ட்ரம்ப்

don-t-know-who-s-using-it-trump-mocks-pm-modi-for-funding-library-in-afghanistan

ஆப்கானிஸ்தானில் இந்தியா அமைத்துக்கொடுத்த நூலகம் யாருக்கும் பயனில்லாமல் இருக்கிறது என்று பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கிண்டலாக பேசியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களிடம் பல்வேறு அம்சங்கள் குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அளித்துள்ள நிதியுதவி குறித்து பேசினார். ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ ஏராளமான பணிகளை அமெரிக்கா செய்து வருவதாகவும், ஆப்கானிஸ்தானில் இயல்பு நிலை திரும்ப 300 கோடி ரூபாய் நிதியுதவியையும் அளித்துள்ளதாகவும் கூறினார். 

ஆனால் இந்திய பிரதமர் மோடியோ ஆப்கானிஸ்தானில் உருவாக்கிய நூலகம் குறித்து பெருமையாக பேசுகிறார் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டார். போர் நடந்துகொண்டிருக்கும் அந்நாட்டில் நூலகம் அமைத்து என்ன பலன்? அந்த நூலகம் தற்போது எங்குள்ளது என அவருக்கு தெரியுமா? என ட்ரம்ப் கிண்டலாக தெரிவித்துள்ளார்.

ஆனால் ட்ரம்ப் கூறியதுபோல் இல்லாமல் இந்தியா உண்மையில் பல நன்மைகளை ஆப்கானிஸ்தானிற்கு செய்துள்ளது. குண்டு வெடிப்பில் ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றக் கட்டடம் சேதமடைந்திருந்தது. அதனை கடந்த 2015ஆம் ஆண்டு சீரமைத்து பிரதமர் மோடி திறந்து வைத்தார். அத்துடன் ஆப்கான் தலைநகர் காபூரில் உயர்ந்த தரத்திலான பள்ளிக்கூடும் மற்றும் கல்வி நிலையங்கள் அமைக்க இந்திய முயற்சி எடுத்துள்ளது. மேலும் ஆப்கான் மாணவர்கள் உதவித்தொகையுடன் இந்தியாவில் கல்வி பயிலவும் வழிவகை செய்து வருகிறது. ட்ரம்ப் பேச்சுக்கு உலக அரசியல் விமர்சகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close