[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

பூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ள முதல் பிரம்மாண்ட ஹோட்டல் 

world-s-first-underground-hotel-in-china

உலகிலேயே‌ முதன்முறையாக பூமிக்கு‌ அடியில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட ஹோட்டல்‌ பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 

புதுமையான படைப்புகளை உருவாக்குவதில் கைத்தேர்ந்தவர்களான சீனர்கள் பிரபல தொழில் நகரமான ஷாங்காய் நகரில் பூமிக்கு அடியில் கைவிடப்பட்ட நிலக்கரி சுரங்கத்தில் சொகுசு ஹோட்டலை கட்டியுள்ள‌னர். பொதுவாக நிலக்கரி மற்றும் தங்க சுரங்கங்கள் மண்ணைக் கொட்டி சமன்படுத்தி வேறு வேலைகளுக்கு பயன்படுத்தப்படும். ஆனால் சீ‌னாவிலோ சுரங்கத்தில் செயற்கை நீர் வீழ்ச்சியை உருவாக்கி, பூமிக்கு அடியிலிருந்து 330‌ மீட்டர் உயரத்தில் இந்தப் பிரம்மாண்ட ஹோட்டலை ‌கட்டி  செயல்பாட்டுக்கும் கொண்டு வந்துள்‌ளனர்.

Image result for intercontinental shanghai wonderland inside

இந்தப் பிரம்மாண்ட ஹோட்டலை 5000க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களைக் கொண்டு கடந்த 10 ஆண்டுகளாக கட்டியுள்ளனர். புர்ஜ் கலிஃபா கட்டத்தை உருவாக்கிய அட்கின்ஸ் நிறுவனம்தான் இந்த ஹோட்டலுக்கான திட்ட வரைப்படத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. உலகிலேயே முதல் பாதாள ஹோட்டல் என்ற பெருமையை பெற்றுள்ள இந்தப் பிரம்மாண்ட ஹோட்டலின் முதல் 2 தளங்களில் மீன் அருங்காட்சியகம் வைக்கப்பட்டுள்ளது.

Image result for intercontinental shanghai wonderland aquarium

''இண்ட்டர் கான்ட்டினெண்ட்டல் டிரீம்லேண்ட்'' என பெயரிடப்பட்டுள்ள இந்த ஹோட்டலில் 337‌‌ அறைகள், உணவகம், நீச்சல் குளம்,‌ விளையாட்டு மைதானம், செயற்கை நீர் வீழ்ச்சி ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளன‌. வெளிநாட்டவரும் இங்கு வந்து தங்க ஆர்வம் காட்டுகின்றனர். 

Image result for intercontinental shanghai wonderland aquarium

இந்தச் சொகுசு ஹோட்டலில் தீம் பார்க் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மலையேற்றம், நீர்சறுக்கு போன்றவற்றை கேளிக்கை விளையாட்டுகளுக்கும் ஹோட்டல் நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒருநாள் இந்த ஹோட்டலில் உள்ள அறையில் தங்குவதற்கு இந்திய மதிப்பில் 43 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. ஓய்வு எடுக்க அல்ல அழகை ரசிப்பதற்காகவே ஏராளமானவர்கள் இங்கு வருகை தர தொடங்கியுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close