[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

இன்ஸ்டாகிராமில் உலகளவில் முதலிடம் பிடித்த பிரதமர் மோடி

india-s-prime-minister-narendra-modi-was-the-most-followed-world-leader-on-instagram

இன்ஸ்டாகிராம் என்ற சமூக வலைத்தளத்தில் உலக அளவில் அதிக பேர் பின்தொடரும் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார்.

உலகத் தலைவர்கள் உட்பட உள்ளூர் நடிகர்கள் வரை அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஒரு தளமாக இருப்பது சமூக வலைத்தளங்கள். இங்கு யார் வேண்டுமானாலும் கருத்துச் சொல்லலாம், அதை யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். இதனால் மக்கள் மத்தியில் சமூக வலைத்தளங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அத்துடன் எத்தகைய தலைவரையும், எப்படிப்பட்ட பிரபலத்தையும் ஒரே ஒரு மீம்ஸைப் போட்டு இங்கு கிண்டல் செய்ய முடியும். இத்தகைய சமூக வலைத்தளங்கள் சில கெளரவங்களையும் பிரபலங்களுக்கு கொடுத்திருக்கிறது.

குறிப்பாக சமூக வலைத்தளத்தில் ஒரு பிரபலம் இருக்கிறார் என்றால், அவரை எத்தனை பேர் பின் தொடர்கிறார்கள் என்பது ஒரு தனித்துவமாக பார்க்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக ட்விட்டர் என்பது உலகப் பிரபலங்களின் இணையப் பெருமையாக பார்க்கப்படுகிறது. இதில் ஆண்டு தோறும் யார் அதிக பின் தொடர்பவர்களைக் கொண்டு முதலிடம் பிடிக்கிறார்? என்று தரவரிசை வெளியிடப்படுகிறது. அதேபோல் இன்ஸ்டாகிராம் அதிக பின் தொடர்பவர்கள் இருக்கும் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள பட்டியலில், அதிகம்பேர் பின் தொடரும் உலகத் தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். அக்டோபர் நிலவரப்படி, அவரை 14.8 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். அவருக்கு அடுத்தபடியாக இந்தோனேஷியாவின் அதிபர் ஜோகோ விடோடோவை 14.3 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். ஆகவே அவர் இரண்டாம் இடத்தில் உள்ளார். அமெரிக்க அதிபரான டொனால்ட் ட்ரம்ப் 11 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் 3வது இடத்திலும், மதப்போதகர் போப் ஃப்ரான்சிஸ் 5.7 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் 4ஆம் இடத்திலும் உள்ளார். 5வது இடத்தில் ஜார்தான் நாட்டின் ராணி ரனியா இருக்கிறார். 

கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி வரை எடுக்கப்பட்ட தகவலின் படி, உலக அளவிலுள்ள தலைவர்களில் அதிக பின் தொடர்பவர்களைக் கொண்டவர்களின் பட்டியல் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close