[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கு எதிரான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கஜா புயலால் வீடுகளை இழந்த 50 விவசாயிகளுக்கு வீடு கட்டித்தரப்படும் - நடிகர் ராகவா லாரன்ஸ்
  • BREAKING-NEWS நக்கீரன் கோபாலுக்கு எதிரான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறைக்கு டிச.21ம் தேதி வரை தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS தொடர் மழையால் வேலூர், திருவாரூர், புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS தொடர் மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.78.88 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.74.99 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஓசூர் அருகே தம்பதி ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சூடுகொண்டப்பள்ளியில் நந்தீஷ் பெற்றோரிடம் எஸ்.சி., எஸ்.டி ஆணைய துணைத்தலைவர் முருகன் விசாரணை

சிறையில் இருந்து ஆசியா பீபி விடுதலை: பாக்.கில் இருந்து வெளியேற்றம்!

asia-bibi-freed-from-jail

இஸ்லாம் மதத்தை இழிவுப்படுத்திப் பேசியதாக கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கிறிஸ்தவ பெண் விடுவிக்கப்பட்டார்.

ஆசியா பீபி (47) என்ற கிறிஸ்தவ பெண், இஸ்லாம் மதத்தை இழிவுப்படுத்தி பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அந்த விவகாரத்தில் அவர் மீது மத நிந்தனை புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் அவருக்கு 2010-ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை லாகூர் உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிர்த்து ஆசியா பீபி, 2015-ஆம் ஆண்டு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆசியா பீவியை கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி விடுதலை செய்தது. 

Read Also -> 'விஸ்வாசம்' நடனக் கலைஞர் உயிரிழப்பு: அஜித் நிதியுதவி  

இந்தத் தீர்ப்பை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. விடுதலை செய்யப்பட்டு ஆசியா பீவி வெளியே வந்தார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறப்பட்டது. அதனால், அவர் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு தரப்பில், மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பு வெளியாகும் வரை அவரை நாட்டை விட்டுச் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து, அங்கு இயல்பு நிலை திரும்பியது.

Read Also -> மகளுடன் நடிகர் பக்ரு: வைரலாகும் ஸ்பெஷல் புகைப்படம்!  

இதனிடையே, ஆசியா பீபியின் கணவர் மற்றும் அவரது குழந்தைகள் யாருக்கும் தெரியாத இடத்தில் இருக்கின்றனர். ’என் மனைவியை விடுத லை செய்யாமல் தாமப்படுத்தப்படுவது, 5 குழந்தைகள் கொண்ட குடும்பத்திற்கு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. என் மகள்கள் அழுது கொண்டி ருக்கிறார்கள். அவர்கள் இன்னும் தங்களுடைய தாயை பார்க்கவில்லை’ என்றார் ஆசியா பீபியின் கணவர் மணிஷ்.

பீபியின் கணவர் மணிஷ் தன் குடும்பத்தை பிரிட்டன் அல்லது அமெரிக்காவுக்கு மாற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தங்களுடைய குடும்பம் நாட்டை விட்டு வெளியேற உதவி செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Read Also -> விஷப்பரீட்சையில் இறங்காதீர்கள் கமல் : கிருஷ்ணசாமி

இந்நிலையில், தீர்ப்பு வெளியாகி ஒருவாரம் ஆன நிலையில், ஆசியா பீபி சிறையில் இருந்து விடுவிக்கப்படாமல் இருந்தார். இந்நிலையில் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒரு வாரத்துக்குப் பிறகு சிறையில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். இதை அவரது வழக்கறிஞர் சைஃப் முலூக் தெரிவித்துள்ளார்.

Read Also -> இந்தியாவுக்கு எதிரான தொடர்: ஸ்மித், வார்னர் மீதான தடை நீக்கம்!

ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமான தளத்துக்கு அழைத்துச்செல்லப்படும் அவர், அங்கிருந்து வேறு நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அவர் எந்த நாட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறார் என்பது தெரியவில்லை.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close