[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

உலகிலேயே மிகப் பெரிய ஆகாயக் கப்பல்

china-has-introduced-a-long-range-aircraft-ship

வான்வழி போக்குவரத்தில், புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய ஆகாயக் கப்பலை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. 66 மீட்டர் நீளமுள்ள இந்த ஆகாயக் கப்பலை சீனாவை சேர்ந்த ஷான்ஸி என்ற விமான நிறுவனம் உருவாக்கியுள்ளது. புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆகாயக் கப்பல் விமானம் மற்றும் ஹோவர்கிராப்ட் ஆகியவற்றின் கூட்டு கலவையினால் தயாரிக்கப்பட்டுள்ளது.

முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆகாயக்கப்பல், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3 ஆயிரம் மீட்டர் உயரம் வரை பறக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் 28 பேர் வரை அமர்ந்து பயணம் செய்யலாம். லித்தியத்தால் ஆன சக்திவாய்ந்த பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. விமானங்களை விட 20 சதவீதம் குறைவாகவே இதற்கு எரிபொருள் செலவாகும் எனக் கூறப்படுகிறது.

சுற்றுலா பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆகாயக் கப்பலை எதிர்காலத்தில் ராணுவ பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் மேம்படுத்த திட்டமிட்டிருப்பதாக ஷான்ஸி நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகிலேயே மிகப்பெரிய ஆகாய விமானமாக இது கருதப்படுவதால், ஒரே நேரத்தில் ஏராளமான ராணுவ தளவாடங்களையும் எளிதாக கொண்டு செல்ல முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேரிடர் காலத்தில் அவசர உதவிகள் செய்வதற்கும், பாதுகாப்பு தொடர்பான ரோந்து பணிகளுக்கும் இந்த ஆகாயக் கப்பலின் பயன்பாடு அதிக அளவில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த ஆகாயக் கப்பலுக்கு ஓடுதளம் தேவையில்லை என்பதால், ஹெலிகாப்டரை போல இருந்த இடத்தில் இருந்து இயக்க முடியும். மேலும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பும் இல்லாமல் சுகமான பயணத்தை தொடரலாம் என்கின்றனர் இதன் வடிவமைப்பாளர்கள்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close