[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

இம்ரான் கான் பதவியேற்பு: இந்திய ’கிரிக்கெட் நண்பர்களு’க்கு அழைப்பு!

imran-khan-invites-aamir-khan-sunil-gavaskar-kapil-dev-to-oath-ceremony

பாகிஸ்தானில் பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான் கான், தனது நண்பர்களான இந்திய கிரிக்கெட் வீரர்கள் கபில்தேவ், கவாஸ்வர் ஆகியோ ருக்கு பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த மாதம் நடந்த தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரிக்-இ-இன்சாப்  கட்சி, வெற்றி பெற்றது. இருந்தாலும் ஆட்சிய மைக்க போதுமான இடங்களை அந்தக் கட்சியால் பெற முடியவில்லை. மற்ற கட்சிகளுடன் இணைந்து  இம்ரான் கான் ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளார்.

பாகிஸ்தானின் சுதந்திர தினமான, வரும் 14 ஆம் தேதிக்குள் பதவியேற்பு விழாவை நடத்தும் முயற்சிகளில் அவர் தீவிரமாக உள்ளார். அந்தப் பதவியேற்பு விழாவில் பங்கேற்க, இந்திய கிரிக்கெட் பிரபலங்களும் இம்ரான் கானின் கிரிக்கெட் நண்பர்களுமான சுனில் கவாஸ்கர், கபில் தேவ் மற்றும் இந்தி நடிகர் ஆமிர்கான் ஆகியோருக்கு இம்ரான் கான் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. மேலும், விழாவில் இந்தியப் பிரதமர் மோடி உள்ளிட்ட சார்க் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க வேண்டும் என்று அக்கட்சி விரும்புகிறது. ஆனால் இன்னும் அழைப்பு விடுக்க வில்லை. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close