[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்
  • BREAKING-NEWS இன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு
  • BREAKING-NEWS மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி
  • BREAKING-NEWS ஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS கேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு
  • BREAKING-NEWS சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இல்லை: ட்ரம்ப்

trump-and-putin-to-hold-first-summit-talks-as-twitchy-west-looks-on

அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டிற்கு இருநாட்டுத் தலைவர்களும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின் இடையேயான சந்திப்பு பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் நடைபெற்றது. அப்போது இரு நாட்டு உறவு, சர்வதேச விவகாரங்கள் குறித்து விரிவாகப் பேசப்பட்டன. பேச்சுவார்த்தைக்குப் பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ட்ரம்ப், புதினுடனான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாக தெரிவித்தார். இதன் மூலம் இரு நாடுகளுக்கிடையேயான உறவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள அவர், திறம்பட மேற்கொண்ட பரப்புரையினாலேயே தேர்தலில் வெற்றி பெற்றதாக தெரிவித்தார். 

இருதரப்பு உறவில் சவாலான விவகாரங்கள் சில இருப்பதாகவும் இருப்பினும் அவற்றை மேம்படுத்துவதற்கான முதல்கட்ட நடவடிக்கையை இருவரும் தொடங்கியிருப்பதாகவும் புதின் கூறினார். இருநாடுகளுக்கிடையேயான பனிப்போர், முடிந்துபோன விவகாரம் என்றும் குறிப்பிட்டார். இந்தச் சந்திப்பின் போது உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நினைவுக் கூறும் வகையில் ட்ரம்பிடம் புதின் கால்பந்தை அளித்தார். உலகக் கோப்பையை ரஷ்யா நடத்தி முடித்திருக்கும் நிலையில், 2026ம் ஆண்டு அமெரிக்கா நடத்த இருப்பதை உணர்த்தும் வகையில் கால்பந்து அளிக்கப்பட்டது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close