வடகொரிய அதிபர் கிம் ஜாங் உடனான சந்திப்பு நிகழுமா என்பது குறித்து அடுத்த வாரம் தெளிவாகத் தெரிய வரும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வரும் ஜூன் 12 ஆம் தேதி சிங்கப்பூரில் கிம் ஜாங் உன்-னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக ட்விட்டரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12ஆம் தேதி நடக்கவுள்ள சந்திப்பு குறித்து, அடுத்த வாரம் தெரிய வரும் என்றும், திட்டமிட்டபடி அந்த சந்திப்பு நடந்தால், வட கொரியாவுக்கு சிறப்பானதாக அமையும் என்றும் அவர் கூறினார். முன்னதாக இந்த சந்திப்பு திட்டமிட்டபடி நடக்கும் என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ உறுதிபட தெரிவித்தார்.
தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சியில் ஈடுபட்டதாலும், அணு ஆயுத திட்டங்களை முழுமையாக கைவிட வேண்டும் என வற்புறுத்தியதாலும், ட்ரம்புடனான சந்திப்பை ரத்துச் செய்யப் போவதாக கிம் ஜாங் உன் கடந்த வாரம் அறிவித்திருந்தார். இதனால் இந்த சந்திப்பு நடக்குமா என்ற சந்தேகம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கிடையே சீன அதிபர் ஸீ ஜின் பிங்கை சந்தித்த பிறகே, கிம் ஜாங் உன் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்பும் குற்றம்சாட்டி வருகிறார்.
நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்!
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்
"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்" ப.சிதம்பரம் சாடல்
கருணை மனுவை திரும்ப பெறுவதாக நிர்பயா குற்றவாளி அறிவிப்பு
போக்குவரத்து விதிமீறல்: கோவையில் மட்டும் ரூ.2.9 கோடி அபராதம் வசூல்!