[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

ஃபேஸ்புக் மட்டுமல்ல ! ட்விட்டர், கூகுளும் தகவலை திருடுகின்றன

not-only-facebook-twitter-and-google-steal-the-information

ஃபேஸ்புக் மட்டுமல்லாது, கூகுள், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களும் பயனர்களின் தகவல்களை திருடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த சில நாட்கள் முன்பு ஃபேஸ்புக் தகவல்களை திருடுவதாக பெரும் சர்ச்சைகள் கிளம்பியது. ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் பெற்று பல்வேறு நாட்டுத் தேர்தல் நடைமுறைகளில் அதைப் முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுதொடர்பாக விளக்களித்த ஃபேஸ்புக் நிறுவனர் மார்க், இந்தியாவில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்றாலும் ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல் பகிரப்பட்டது. உண்மை தான் எனவும் ஒப்புக்கொண்டார். இந்நிலையில் ஃபேஸ்புக் பயனாளிகள் தகவல் கசிவால், இந்தியாவில் சுமார் 5 லட்சத்து 62 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அந்நிறுவனம் கூறியுள்ளது. அது தொடர்பாக பல்வேறு கேள்விகளுக்கு நமக்கு தகவல் இல்லை.

ஃபேஸ்புக் சேவையை பயன்படுத்தும் ஒரு இணையதளத்திற்கு செல்லும் போது அல்லது  அதன் செயலியை பயன்படுத்தும்போது பயனாளருக்கு பேஸ்புக் கணக்கு இல்லை என்றாலும் அல்லது ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறி இருந்தாலும், அவரை பற்றிய விவரங்கள் கிடைக்கும் என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஃபேஸ்புக் நிறுவன மேலாண்மை இயக்குநர் டேவிட் பாசர் இணையதளத்தில் பதிவிடும் விளம்பரங்களை ஃபேஸ்புக் கணக்கு இல்லாதவர்கள் பயன்படுத்தினாலும் அவர்களின் தகவல்களும் பெறமுடியும் என தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் பயனர்களின் தகவல்களை திருடும் வேலையை ட்விட்டர், கூகுள், அமேசான் போன்ற நிறுவனங்களும் பின்பற்றுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஃபேஸ்புக் நிறுவன மேலாண்மை இயக்குநர் டேவிட் பாசர் தெரிவித்தார். இதன்மூலம் ஃபேஸ்புக் கணக்கில்லாதவர்களின் தகவலையும் சமூக வலைதளங்கள் திருடலாம் என்றும் டேவிட் பாசர் தெரிவித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close