[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

சிரியா மீது மீண்டும் தாக்குதல்:   ட்ரம்ப் எச்சரிக்கை

donald-trump-says-mission-accomplished-on-perfectly-executed-strikes

சிரியா புதிதாக ரசாயன தாக்குதலுக்கு திட்டமிட்டால் மீண்டும் அந்நாட்டு அரசுப் படைகள் மீது தாக்குதல் நடத்த தயங்க மாட் டோம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு சிரிய அரசுப் படைகளே காரணம் என குற்றம்சாட்டி வந்த அமெரிக்கா, ரசாயன ஆயுதங்களை ஒழிக்க தாக்குதல் நடத்தப் போவதாக எச்சரித் திருந்தது. இந்நிலையில் பிரிட்டன், பிரான்ஸ் நாட்டு ராணுவத்துடன் இணைந்து சிரியாவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ரசாயன ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் டமாஸ்கஸ் உள்ளிட்ட மூன்று இடங்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்கள் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக, அமெரிக்காவின் பென்டகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சிரியாவும், ரஷ்யாவும் அதிர்ச்சி அடைந்துள்ளன.

தாக்குதல் குறித்து ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப், மிகத் துல்லியமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார். அத்துடன் தாக்குதலுக்கு உதவிய, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். மேலும் இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் புதிதாக ரசாயன தாக்குதலுக்கு திட்டமிட்டால் மீண்டும் சிரியா மீது தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் என்றும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பான விசாரணை முடிவடைதற்கு முன்பாகவே அமெரிக்கா அவசரப்பட்டு தாக்குதல் நடத்தியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close