[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்
  • BREAKING-NEWS அரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்
  • BREAKING-NEWS கர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்
  • BREAKING-NEWS பாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS மாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்

சிறையில் கலவரம்: 9 பேர் பலி, 100 கைதிகள் எஸ்கேப்!

9-dead-in-latest-outbreak-of-brazilian-prison-violence

பிரேசில் நாட்டில் சிறைக்குள் ஏற்பட்ட கலவரத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர். 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். 106 கைதிகள் தப்பியோடி விட்டனர்.

பிரேசில் நாட்டின் மத்திய பகுதியில் உள்ளது கோயியாஸ் நகரம். இங்குள்ள சிறையில் ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். 
இங்கு கைதிகள் இருபிரிவாக பிரிந்து குழுவாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த வருட ஜனவரி மாதம் இவர்கள் மோதிக்கொண்டதில் 130 பேர் கைதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து அவர்களுக்குள் சிறு சிறு மோதல் அவ்வப்போது வெடிக்கும். ஆனால் இப்போது இந்த மோதல் தீவிரமடைந்து கலவரமாக மாறியது. இதில் 9 பேர் பலியாயினர். 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். கலவரத்தை பயன்படுத்தி சுமார் 106 கைதிகள் தப்பி ஓடிவிட்டனர். அதில் 27 பேரை பிடித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close