[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி
  • BREAKING-NEWS தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்
  • BREAKING-NEWS சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி

கென்யாவில் பேருந்தும் லாரியும் மோதி விபத்து: 30 பேர் பலி

at-least-30-dead-18-hurt-in-migaa-bus-truck-collision

கென்யாவில் இன்று காலை பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர். 

ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றான கென்யாவின் பசியா பிரதேசத்தில், நகுரு-எல்டோரெட் தேசிய நெடுஞ்சாலையில் 50க்கும் அதிகமான பயணிகளுடன் சென்ற பேருந்து, எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் லாரி மற்றும் பேருந்து ஆகிய இரண்டுமே கடும் சேதமடைந்தன.

இந்த விபத்தில் பேருந்து மற்றும் லாரியில் பயணித்த 30 பேர் பலியாகினர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் விபத்துக்கான காரணம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்ட தகவலில் பேருந்து 100 கி.மீ வேகத்தில் சென்றதே விபத்துக்கு முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close