[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை
  • BREAKING-NEWS சென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்
  • BREAKING-NEWS சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது
  • BREAKING-NEWS புதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்

புதின் மீண்டும் போட்டியிட பெருகும் ஆதரவு

celebrity-laden-action-group-officially-nominates-putin-as-candidate-for-russian-presidency

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் மீண்டும் விளாடிமிர் புதின் போட்டியிடுவதற்கு ஏ‌ராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவின் அதிபர் தேர்தலுக்கு புதின் மீண்டும் போட்டியிட வேண்டும் என்று திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், அரசி‌யல்வாதிகள் என நூற்றுக்கணக்கானோர் தலைநகர் மாஸ்கோவில் திரண்டு வந்து அவரை அதிகாரப்பூர்வ வேட்பாளராக நிறுத்துவதற்கு ஆதரவு தெரிவித்தனர். அத்துடன் ஆளும் ஐக்கிய ரஷ்ய கட்சியும், ஜஸ்ட் ரஷ்ய கட்சியும் புதினுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளன. 

அதிபர் தேர்தலில் போட்டியிட குறைந்தபட்சம் 500 பேர் அவரது பெயரை முன்மொழிய வேண்டும் என்ற நிலையில், இதுவரை 668-க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் புதினை ஆதரித்துள்ளனர். இதன் காரணமாக அடுத்த ஆண்டு மார்ச் 18ஆம் தேதி நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் புதின் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் போட்‌டியிடுவதற்காக விரைவில் அவர் வேட்பு மனுத் தாக்கல் செய்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close