[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS பிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மதியம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய
  • BREAKING-NEWS மேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்
  • BREAKING-NEWS கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்
  • BREAKING-NEWS மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை

நடுவானில் ’ஒயின்’ பஞ்சாயத்து: அவசரமாக தரையிறங்கியது விமானம்!

swiss-woman-angry-over-champagne-refusal-ejected-from-plane

ஒயின் தர மறுத்ததால் விமானபணிப்பெண்களுடன் பெண் பயணி தகராறில் ஈடுபட்டதை அடுத்து, விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

மாஸ்கோவில் இருந்து சுவிட்சர்லாந்தின் ஸூரிச் நகருக்கு விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. விமானத்தின் பிசினஸ் கிளாஸில் பயணித்த 44 வயது பெண் பயணி ஒருவர், ஒயின் கேட்டார். 

விமானப் பணிப்பெண்கள் கொடுத்துள்ளனர். தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்ததால் பணிப்பெண்கள் மறுத்துள்ளனர். போதையும் அவருக்கு அதிகமாகிவிட்டது. இதனால் பணிப்பெண்களுடன் அவர் தகராறில் ஈடுபட்டார். இதையடுத்து விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அப்போது விமானம் ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் நகருக்கு மேலே சென்றுகொண்டிருந்தது. அந்தப் பெண் பயணியை கட்டுப்படுத்த முடியாததை அடுத்து அவசரமாக ஸ்டட்கார்ட் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கினார் விமானி. போலீசாரிடம் அந்தப் பெண் பயணி ஒப்படைக்கப்பட்டார். இப்படி விமானத்தை அவரசமாக தரையிறக்கியதால் அதற்கான அபராதத் தொகை ஐந்தாயிரம் யூரோ, அந்தப் பயணிடம் வசூலிக்கப்பட்டது.
 

Advertisement:
Related Tags : SwissAngryChampagnePlaneWine
Advertisement:
Advertisement:
[X] Close