[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS குஜராத்: அகமதாபாத்தில் வல்லபாய் படேல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு

காரில் மெதுவாகச் சென்ற பெண்ணுக்கு அபராதம்!

canada-ontario-driver-ined-for-driving-too-slow-twitter-reactions

கனடா நாட்டில் காரில் மெதுவாகச் சென்ற பெண்ணுக்கு அந்நாட்டு காவல்துறை அபராதம் விதித்துள்ளது. இந்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சாதாரணமாக காரிலோ அல்லது இருசக்கர வாகனத்திலோ வேகமாக சென்றவர்களுக்கு அபராதம் விதிப்பது இயல்பானது. ஆனால், கனடாவில் 47 வயது பெண்மணி ஒருவர், வாகனங்கள் வேகமாகச் செல்லும் பாதையில், மிக மெதுவாக சென்றுள்ளார். அப்போது, அவருக்கு பின்னாள் வந்த வாகனங்களில் பயணித்தவர்கள், எரிச்சல் அடைந்துள்ளனர். அதனால், அவர்களில் ஒருவர் காவல்துறைக்கு தொடர்பு கொண்டு இதுகுறித்து தெரிவித்துள்ளார். 

அங்கு வந்த காவல்துறையினர், பெண்மணியின் வாகனத்தை நிறுத்தி,வேகமாக செல்ல வேண்டிய பாதையில்,மெதுவாகச் சென்றதற்காக அபராதம் விதித்தனர். இதை சமூக வலைதளங்களில் பார்த்தவர்கள், எங்கள் வீட்டில் உள்ள அப்பா,அம்மா மற்றும் பெரியவர்களுக்கு இதுகுறித்து தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். முதலில் என் அம்மாவை அழைத்து, அபராதம் விதிக்கப்பட்டது உங்களுக்குத் தானா என்று கேட்க வேண்டும் என தங்களது சமூக வலைதள பக்கங்களில் விளையாட்டாக பதிவு செய்து வருகிறார்கள்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close