[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எங்கள் பக்கம் நியாயம் இருந்ததால் இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS மருத்துவர்களின் சேவையை சிவப்புக் கம்பளத்துடன் வரவேற்கிறோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS ஆட்சி மாற்றம் விரைந்து நடக்க வியூகம் வகுப்போம் - ஸ்டாலின்
  • BREAKING-NEWS பள்ளி மாணவர்களுக்கு என தனி பேருந்தை ஏன் இயக்கக் கூடாது என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
  • BREAKING-NEWS புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது
  • BREAKING-NEWS புதுச்சேரியில் சட்டப்பேரவை கூட்டம் சபாநாயகர் தலைமையில் தொடங்கியது
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு அரசு மருத்துவர்கள் இரண்டு பேர் ஆஜர்
  • BREAKING-NEWS நடிகர் விஷால் கூறுவது போல் அன்புச்செழியனுக்கு அமைச்சர்கள் ஆதரவு என்பதில் எந்த உண்மையும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கந்துவட்டி கொடுமையை சட்டமும் சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும்: கமல்ஹாசன்
  • BREAKING-NEWS அன்புச்செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்படுவது வேதனை: இயக்குநர் சீனுராமசாமி
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகரின் கூட்டாளி புல்கித் என்பவர் கைது
  • BREAKING-NEWS கந்துவட்டி தொடர்பாக பொதுமக்கள் அச்சமின்றி புகார் அளிக்க முன்வர வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை இறுதி செய்ய 2 நாளில் டெல்லி செல்கிறார் ராஜேஷ் லக்கானி
  • BREAKING-NEWS கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களின் பட்டியலை தயார் செய்ய விஷால் உத்தரவு
உலகம் 08 Nov, 2017 04:18 PM

சவுதியின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையில் அமெரிக்கா தலையீடு

america-emphasis-to-saudi-arabia

சவுதி அரசின் ஊழல் எதிர்ப்பு அதிரடி நடவடிக்கையில் அமெரிக்கா தலையிட்டு கருத்துச் சொல்லியுள்ளது. 

சவுதி அரேபியாவில் மன்னராட்சி நடந்து வருகிறது. அரசின் முக்கிய பொறுப்புகளில் மன்னர் குடும்பத்தினரே இருந்துவருகின்றனர். மன்னர் சல்மானின் மகனான முகம்மது பின் சல்மான், பட்டத்து இளவரசராக பொறுப்பேற்ற பின் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஊழலுக்கு எதிராக அவர் தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி மக்கள் பணத்தை கொள்ளையடிப்பவர்களுக்கு எதிராக இந்த ஆணையம் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆணையம் அமைக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, கோடீஸ்வரரும் இளவரசருமான அல் வாலீத் பின் தலால் உட்பட அரச குடும்பத்தைச் சேர்ந்த 11 இளவரசர்கள் கைது செய்யப்பட்டனர். அத்துடன் முன்னாள் அமைச்சர்கள் 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் சவுதி அரேபிய அரசு, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான விசாரணையை நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடத்துமாறு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவுத் துறை செய்திதொடர்பாளர் ஹீதர், சவுதி‌ அரசு ஊழல்வாதிகளை கண்டுபிடித்து கைது செய்திருப்பதை அமெரிக்கா வரவேற்கிறது. அதேசமயம் அவர்கள் மீதான விசாரணை நியாயமாகவும், வெளிப்படை‌யாகவும் அமைய வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். 

Advertisement:
Advertisement:
Advertisement:

[X] Close