[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு

இந்தோனேஷியாவில் சீறும் எரிமலை: 35,000 பேர் வெளியேற்றம்

thousands-evacuated-as-volcano-on-holiday

இந்தோனேஷியாவின் பாலித் தீவில் உள்ள அகுங் எனும் மிகப் பெரிய எரிமலை சீறத் தொடங்கியுள்ளது. நீராவி, மற்றும் புகை எரிமலையில் இருந்து வெளிப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அகுங் எரிமலை அருகே வசித்து வரும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

எரிமலையை சுற்றியுள்ள 12 கிலோ மீட்டர் சுற்றளவில் பொதுமக்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எரிமலை சீற்றத்தால் விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பாலித் தீவில் சுற்றுலாவும் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. ‌எரிமலை ஆபத்து காரணமாக பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் தங்கள் குடிமக்களை இந்தோனேஷியாவுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளன.

இந்தோனேஷியாவில் 130-க்கும் அதிகமான எரிமலைகள் இருக்கின்றன. அவற்றில் அகுங் எரிமலை அவ்வப்போது சீற்றத்துடன் காணப்படும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close