[X] Close
JUST IN
 • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் முக்கிய பிரச்னைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது; படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்: ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி
 • BREAKING-NEWS கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வு பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
 • BREAKING-NEWS பேரறிவாளனுக்கான பரோல் அனுமதியை மேலும் 6 மாத காலத்துக்கு நீட்டிக்க வேண்டும்: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டி: மலேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்ன விவகாரத்தில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி: கே.பி.முனுசாமி
 • BREAKING-NEWS முதலமைச்சர் நாற்காலியை அடைவதோ; அதை பறிகொடுத்து தர்மயுத்தம் நடத்த வேண்டியது திமுகவில் கிடையாது: ஸ்டாலின்
 • BREAKING-NEWS அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சில் அதிமுகவை யார் ஆள்வது என்பது தெரிகிறது: சீமான்
 • BREAKING-NEWS திருவள்ளூர்: பொன்னேரியில் அசுத்தமாக இருந்த 4 திருமண மண்டபங்களுக்கு தலா ரூ.50,000 அபராதம்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 10 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்: ஸ்டாலின்
 • BREAKING-NEWS சேலத்தில் டெங்கு கொசு உருவாக காரணமான தனியார் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்
 • BREAKING-NEWS மெர்சல் படத்தின் வசனங்கள் மக்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது: நாராயணசாமி
 • BREAKING-NEWS விஜய்யை வளைத்து அரசியல் செய்கிறோமா? தமிழிசை
 • BREAKING-NEWS விழுப்புரம்; கள்ளக்குறிச்சி கோமுகி, மணிமுக்தா அணைகளில் இருந்து நீர் திறப்பு
உலகம் 25 Sep, 2017 03:55 PM

உலகின் அதிக எடையுடன் திகழ்ந்த எகிப்து பெண்மணி காலமானார்

eman-ahmed-once-worlds-heaviest-woman-dies

உலகின் அதிக எடை கொண்ட பெண்ணாக திகழ்ந்தவரும், மும்பையில் எடை குறைப்பு சிகிச்சை பெற்றவருமான எகிப்து நாட்டைச் சார்ந்த பெண்மணி ஈமான் அகமது உயிரிழந்தார்.

எகிப்து நாட்டைச் சேர்ந்த ஈமான் அகமது பிறக்கும் போது 5 கிலோவாக இருந்தார். பின்னார் வயது ஆக ஆக அவரது எடை அதிக அளவில் கூடிக்கொண்டே சென்றது. கடந்த 2014-ம் ஆண்டு அவர் 300 கிலோ எடையை எட்டினார். அப்பொழுது முதல் அவரது உடலில் நிறைய உபாதைகள் ஏற்படத் தொடங்கின. இதனால் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற தொடங்கினார். ஆனால், அடுத்த இரண்டு வருடத்திற்குள் 500 கிலோ எடையை அடைந்தார். உலகின் அதிக எடை கொண்ட பெண் என்ற பெயரும் அவருக்கு கிடைத்தது. உடல் எடையை குறைக்கவும் இதர உடல் உபாதைகளை சரிசெய்யவும் பல்வேறு இடங்களில் அவர் தொடர்ந்து சிகிச்சைபெற்று வந்தார். இருப்பினும் பலனளிக்காததால், ஆன்-லைன் மூலம் மும்பையில் உள்ள மருத்துவமனையை அணுகினார். 

ஈமான் அகமது சுமார் 500 கிலோ எடையுடன் கடந்த ஜனவரி மாதம், மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் மருத்துவர்கள் அளித்த சிகிச்சையால் 240 கிலோ குறைந்ததாக கூறப்பட்டது. பின்னர் சிகிச்சை முடிந்து ஈமான் தாயகம் திரும்பினார். மும்பை சிகிச்சை காரணமாக உலகிலேயே அதிக எடை உடையவர் என்ற பட்டத்தை இழந்தார். 3 ஆண்டுகளாக உலகின் அதிக எடை கொண்ட பெண்ணாக ஈமான் திகழ்ந்தார்.

எடை குறைப்புக்கு பின்னர், கடந்த மே மாதம் முதல் அபுதாபியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக அவருக்கு சிறுநீரகம் மற்றும் இதயக் கோளாறால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், அபுதாபி மருத்துவமனையில் ஈமான் அகமது இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனை நிர்வாகம் அவரது உயிரிழப்பை உறுதி செய்துள்ளது. கடந்த வாரம்தான் ஈமான் தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடினார். 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close