[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரிசார்ட்டில் உள்ள தனது ஆதரவு எம்எல்ஏக்களை சந்திக்க டிடிவி தினகரன் இன்று புதுச்சேரி செல்கிறார்
  • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 4,309 கன அடியில் இருந்து 3,534 கன அடியாக குறைந்தது
  • BREAKING-NEWS ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனோகரன் என்பவர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை
  • BREAKING-NEWS மருத்துவ கலந்தாய்வு இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரில் நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவு
  • BREAKING-NEWS இன்றைய பெட்ரோல் விலை: ரூ.71.37 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 60.06 காசுகளாகவும் உள்ளது
  • BREAKING-NEWS திருவாரூர்: மன்னார்குடியில் தனது ஆதரவாளர்களுடன் திவாகரன் ஆலோசனை
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள முருகனுக்கு உடல்நலக்குறைவு
  • BREAKING-NEWS அனைத்து அமைச்சர்களும் நாளை சென்னையில் இருக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
  • BREAKING-NEWS நீட்தேர்வு விவகாரத்தில் நாளை எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்திற்கு திவாகரன் ஆதரவு
  • BREAKING-NEWS ஆட்சிக்கும் கட்சிக்கும் தொல்லை கொடுக்க சிலர் முயற்சிக்கின்றனர்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS சிறப்புப் பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு நாளை காலை 9 மணிக்கு தொடங்குகிறது
  • BREAKING-NEWS சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
உலகம் 28 Jul, 2017 08:15 AM

பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை விட்டுக்கொடுக்காத பில் கேட்ஸ்

bill-gates-back-to-no-1-position

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு வந்த மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் சிறிது நேரத்திலேயே மீண்டும் முதலிடத்தை பிடித்தார்.

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸை முந்தி, அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பேசோஸ்  சிறிது நேரத்திற்கு முதலிடத்தில் இருந்தார். இந்தத் தகவலை அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டது. மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் ஆன்லைன் வர்த்தக  நி்றுவனங்களின் பங்குகள் சந்தையில் விற்பனையானதை அடிப்படையாக வைத்து இந்த மதிப்பீடு கணக்கிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த நேரத்தில், அமேசான் நிறுவனத்தின் பங்கு வர்த்தக மதிப்பு 90.60 அமெரிக்க மில்லியன் டாலராகவும், பில்கேட்ஸின் பங்கு வர்த்தக மதிப்பு 90 மில்லியன் டாலராகவும் இருந்துள்ளது. சில மணி நேரத்திலேயே அமேசான் நிறுவனத்தின் பங்கு விற்பனை சரிந்ததால், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் மீண்டும் முதலிடத்திற்கு வந்தார்.    
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close