[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

உலகம் 2016: பரபரப்பாகப் பேசப்பட்ட டாப் 5 சம்பவங்கள்

world-top-5-incidents-in-2016

2016ம் ஆண்டின் மிகப்பரபரப்பாகப் பேசப்பட்ட சம்பவங்களில் முதலிடத்தைப் பிடித்தது அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் பெற்ற வெற்றிதான்.

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாகக் கருதப்படும் அமெரிக்க அதிபர் தேர்தல்தான் 2016ல் ஊடகங்களில் அதிகம் இடம் பெற்ற செய்தியானது. அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹிலாரியை வீழ்த்தி, அமெரிக்காவின் புதிய அதிபராக குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். ஹிலாரியே வெற்றி பெறுவார் என்று பல்வேறு கருத்துக்கணிப்புகளின் முடிவுகளும் கூறிவந்தன. ட்ரம்ப் மீது பாலியல் புகார்கள் உட்பட ஏராளமான புகார்கள் அடுக்கப்பட்டன. அத்தனையும் முறியடித்து அதிபரானார் ட்ரம்ப்.

தீவிர அரசியலில் ஈடுபடாமல் வர்த்தகப் பின்னணியில் இருந்து அமெரிக்க அதிபரான முதல் நபர் என்ற பெயரைப் பெற்ற ட்ரம்ப், வரும் ஜனவரியில் அமெரிக்க அதிபராகப் பதவியேற்க இருக்கிறார்.

பிடல் காஸ்ட்ரோ மறைவு

அமெரிக்காவைக் கடைசி வரையில் எதிர்த்துக் கொண்டிருந்த ஒரு உலகப் பெருந்தலைவர் மறைவும் 2016ல்தான் நிகழ்ந்தது. கியூபாவின் புரட்சியாளரான பிடல் காஸ்ட்ரோவின் மறைவு 2016ம் ஆண்டை வரலாற்றில் நிரந்தரமாக இடம்பெறச் செய்து விட்டது. சோவியத் ரஷ்யாவில் வேர்விட்ட கம்யூனிசக் கொள்கைகளை உலகிற்கு ஓங்கி ஒலிக்கச் செய்த தலைவர்களுள் முக்கியமானவர் காஸ்ட்ரோ. அரைநூற்றாண்டாக கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ, உலகின் சர்க்கரை கிண்ணமாக நாட்டை மாற்றியவர். பொதுவுடமைக் கொள்கைகளால் உலக ஏகாதிபத்தியங்களுக்கு சவால் விட்ட காஸ்ட்ரோ கடந்த நவம்பர் 25ம் தேதி மறைந்தார். அவரின் மறைவு கியூபா மட்டுமின்றி உலக அளவில் கம்யூனிசக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்களுக்கு பேரிழப்பாக இருந்தது. அவரது சாம்பல் சாண்டியாகோ நகரின் உள்ள கல்லறையில் வைக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பிரெக்ஸிட்:

சூரியன் மறையாத நாடு என்று புகழப்பட்ட பிரிட்டனின் பொருளாதாரத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதித்த நிகழ்வு பிரெக்ஸிட். ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறியது 2016ன் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த போது, இதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்ற பல்வேறு விதமான கருத்துக்கள் முடடி மோதின. பிரிட்டன் மக்களிடம் பொதுவாக்கெடுப்பு கடந்த ஜூனில் நடந்தது. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறக் கூடாது, அவ்வாறு வெளியேறினால் கடுமையான பாதிப்புகளைச் சந்திக்க வேண்டி வரும் என்று அப்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் தீவிரமாக பிரசாரம் செய்தார். ஆனால், ஐரோப்பிய யூனியலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என 52 சதவீத மக்கள் வாக்களித்தனர். பிரிட்டன் மக்களின் இந்த முடிவை ஏற்றுக் கொள்வதாகக் கூறி பிரதமர் பதவியை டேவிட் கேமரூன் ராஜினாமா செய்தார். இதையடுத்து பிரிட்டனின் பிரதமராகப் பதவியேற்ற தெரேசா மே, பிரக்ஸிட் முடிவை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார்.

மகாராணி இரண்டாம் எலிசபெத்:

பிரிட்டனில் நடந்த மற்றொரு நிகழ்வும் கடந்த ஆண்டில் மிகப் பிரபலம். அது பிரிட்டன் மகாராணியின் 90வது பிறந்த நாள் கொண்டாட்டம். பிரிட்டன் மகராணியாக நீண்டநாட்கள் பதவி வகித்தவர் என்ற பெருமை பெற்ற ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த ஏப்ரல் 21ல் 90ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். உலகின் பல்வேறு நாடுகளை காலனி ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்த இங்கிலாந்தின் ராணியாகக் கடந்த 1952ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி பதவியேற்றார் எலிசபெத். உலக அளவில் மிகப்பெரும் அரசியல் மாற்றங்களைக் கண்டுள்ள ராணி எலிசபெத், தாய்லாந்து மன்னர் பூமிபால் மறைவுக்குப் பின்னர் உலகின் மிகமூத்த அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற பெருமையையும் பெற்றவர். அவரது பிறந்த நாள் கொண்டாட்டம் கடந்த ஆண்டின் பிரசித்தி பெற்ற நிகழ்வாக இருந்தது. ஏப்ரல் 21ம் தேதி தொடங்கிய அந்தக் கொண்டாட்டம் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்தது. இந்த கொண்டாட்டத்தில் பிரிட்டன் ராணுவத்தைச் சேர்ந்த 900 குதிரைகள், 1500-க்கும் மேற்பட்டவர்கள் அணிவகுத்தனர். இந்தநிகழ்ச்சியை ஆயிரக்காண மக்கள் கண்டுகளித்தனர்.

சிரியாவும், பயங்கரவாதமும்:

இஸ்லாமியக் கொள்கைகளைப் பின்பற்றி இஸ்லாமிக் ஸ்டேட் என்ற பெயரில் புதிய அரசை உருவாக்கப் போகிறோம் என்ற அறிவிப்புடன் கடந்த நான்காண்டுகளுக்கு முன்னர் தோன்றிய ஐஎஸ் அமைப்பு கடும் பின்னடைவைச் சந்தித்த ஆண்டு 2016. ஆரம்பத்தில் இந்த இயக்கத்துக்கு பல்வேறு இஸ்லாமிய நாடுகளும் ஆதரவளிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த இயக்கத்தினை இஸ்லாமிய நாடுகள் நிராகரித்தன. சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐஎஸ் இயக்கத்துக்கு ரஷ்யாவின் தலையீட்டால் 2016ம் ஆண்டில் மிகப்பெரிய பின்னடைவே ஏற்பட்டது. அரசு ஆதரவுப் படைகள் ஐஎஸ் இயக்கத்தின் பிடியில் இருந்து அலெப்போ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை கைப்பற்றியுள்ளன.

சிரியாவில் அமைதியை ஏற்படுத்த ஐக்கியநாடுகள் சபை தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. மற்றொரு புறம், அங்கு ஆளும் பஷார் அல் அசாத் அரசுக்கு ஆதரவாக ரஷ்யா களமிறங்கியது. இதனால் போர் உக்கிரமெடுத்த போதிலும், ஐ.எஸ். அமைப்புக்கு அது பெரும் பின்னடைவைத் தந்தது. ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து அலெப்போ நகரின் கிழக்குப் பகுதியைக் கைப்பற்ற நடந்த சண்டையில் குழந்தைகள், பெண்கள் என பாரபட்சமில்லாமல் கொன்று குவிக்கப்பட்டது அந்த போரின் தீவிரத்தை நமக்கு உணர்த்தப் போதுமானது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close