[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

118 பயணிகளுடன் லிபியா விமானம் கடத்தல்

libia-flight-hyjack

சபா நகரில் இருந்து திரிபோலி நகருக்கு 118 பயணிகளுடன் சென்ற லிபியா விமானம் மால்டாவிற்கு கடத்தப்பட்டுள்ளது.

லிபியா அரசின் விமான நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320 என்ற விமானம் லிபியாவின் சபா நகரில் இருந்து திரிபோலி நகருக்குச் சென்று கொண்டிருந்தபோது நடுவானில் கடத்தப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட விமானத்தில் 118 பயணிகள் இருந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. 2 பேர் விமானத்தை கடத்தி இருப்பதாகவும் அவர்களிடம் கையெறி வெடிகுண்டுகள் இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. தற்போது விமானம் மால்டாவில் தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த விமான கடத்தலை கடாஃபி ஆதரவாளர்கள் நிகழ்த்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதற்கிடையே, விமானம் தரையிறக்கப்பட்டுள்ள இடத்தில் ராணுவ வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக, மால்டா பிரதமர் ஜோசப் மஸ்கட் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close