[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

மது விடுதிக்கு சென்ற தாய்.. கவனிப்பின்றி கிடந்த மூன்று மாத குழந்தையை கடித்து கொன்ற ராட்சத எலிகள்..!

sleeping-baby-girl-eaten-by-giant-rats

தென் ஆப்ரிக்காவில் ராட்சத எலிகள் தூங்கிக் கொண்டிருந்த மூன்று மாத பெண் குழந்தையை உயிரோடு தின்றுள்ள கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜொஹ்யாநெஸ்பர்க் நகரத்தில் இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. 26 வயதான குழந்தையின் தாய், குழந்தையை இரவு தனியே விட்டுவிட்டு தன் காதலனுடன் மது விடுதிக்கு சென்றுள்ளார். அதிகாலை வீடு திரும்பிய போது, குழந்தை உடல் சிதறி இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது. குழந்தை கவனிப்பாரற்று இருந்தாக குற்றம் சாட்டி குழந்தையின் தாயை போலிசார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் ராட்சத எலிகள் இரவு முழுவதும் குழந்தையின் நாக்கு, கண்கள் மற்றும் விரல்கள் அனைத்தையும் கொடூரமாக கடித்து தின்றுள்ளது தெரியவந்துள்ளது. குழந்தையின் தாய் கணவரிடமிருந்து பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. தென் ஆப்பிரக்காவில் சுமார் 3 அடி உயரமும் கூர்மையான பற்களையும் கொண்ட ராட்சத எலிகள் அதிகமாக காணப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close