[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

39 பேருடன் சென்ற ரஷ்ய ராணுவ விமானம் விபத்து.. 27 பேர் பலி..!

russian-il-18-plane-crash-lands-in-siberia

39 பேருடன் சென்ற ரஷ்ய ராணுவ விமானம் மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

39 பேருடன் சென்ற ரஷ்ய ராணுவ விமானம் சகா குடியரசு பகுதியில் இன்று காலை விபத்துக்குள்ளானது. ரஷ்ய ராணுவ விமானமான ஐ.எல் 18 ரக விமானம் சைபீரியா பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 27 பேர் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் மேலும் பலர் இறந்திருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இந்த விமானத்தில் 32 பயணிகளும், பைலட் உள்பட 7 விமான ஊழியர்களும் இருந்துள்ளனர். மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த விபத்தில் 16 பேர் படுகாயமடைந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. விபத்து நிகழ்ந்த இடத்துக்கு மீட்பு பணிக்காக 8 ஹெலிகாப்டர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close