[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

இன்று மாலை நடைபெறுகிறது பிடல் காஸ்ட்ரோ இறுதிச்சடங்கு

cuba-crowds-pay-last-respects-to-fidel-castro-in-santiago

மறைந்த கியூபாவின் முன்னாள் அதிபரும், புரட்சியாள‌ருமான பிடல் காஸ்ட்ரோவின் இறுதிச்சடங்கு தலைநகர் ஹவானாவில் இன்று மாலை நடைபெறுகிறது.

கியூபாவின் புரட்சியாளரும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோ உடல்நலக்குறைவு காரணமாக நவம்பர் மாதம் 25-ஆம் தேதி உயிரிழந்தார். அவருக்கு வயது 90. பிடல் காஸ்ட்ரோவின் விருப்பத்திற்கிணங்க அவரது உடல் இறந்த சிலமணி நேரங்களுக்குள்ளாகவே தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது சாம்பல் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. நாட்டு மக்களின் அஞ்சலிக்குப் பின்னர், இன்று மாலை ஹவானாவில் காஸ்ட்ரோவின் சாம்பல் அடக்கம் செய்யப்படுகிறது. காஸ்ட்ரோவின் இறுதிச்சடங்கில் இந்தியாவின் சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close