[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தி.மலையில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்ய சிறப்புக்குழுக்களை அமைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா

தைவான் அதிபருடன் பேச்சுவார்த்தை.. சீனாவின் கோவத்துக்கு ஆளான ட்ரம்ப்..?!

donald-trump-risks-china-rift-with-taiwan-call

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்டு ட்ரம்ப், தைவான் அதிபர் சாய் இங்-வென்னுடன் தொலைபேசியில் பேசியது சர்வதேச அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்ப்பின் இந்த செயல் சீனாவை சினமடையச் செய்யும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தைவானை, சீனாவின் ஒரு பகுதியாக 1979 ஆம் ஆண்டு அமெரிக்கா ஏற்றுக்கொண்டபின் அதன் தலைவர் ஒருவருடன் அமெரிக்க அதிபரோ, அதிபராக பொறுப்பேற்கவுள்ளவரோ தொலைபேசியில் பேசுவது இதுவே முதன்முறை. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தைவான் அதிபர் சாய் இங்-வென்னுடன் டொனால்ட் ட்ரம்ப் பேசியபோது, அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தைவான் அதிபருடன் தொலைபேசியில் பேசியதன்மூலம் தூதரக ரீதியிலான கொள்கையை ட்ரம்ப் மீறிவிட்டதாகவும், இது சீனாவை சினமடையச் செய்யும் நடவடிக்கை என்றும் அமெரிக்க ஊடகங்கள் கூறியுள்ளன. அதேநேரத்தில், தைவான் அதிபருடன் ட்ரம்ப் பேசியதால், அமெரிக்காவுடனான உறவு பாதிக்கப்படாது என சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : America chaina donald trump taiwan
Advertisement:
Advertisement:
[X] Close