[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்

2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி: நடத்தும் வாய்ப்பிலிருந்து இத்தாலி விலகல்

italy-s-olympic-committee-has-officially-withdrawn-its-bid-to-stage-the-2024-games

2024- ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான போட்டியில் இருந்து விலகுவதாக இத்தாலி ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரோம் மாநகர நிர்வாகத்தின் ஒப்புதல் இல்லாமல் போட்டியை நடத்த இயலாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இத்தாலி ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் ஜியோனி மலாகோ தெரிவித்துள்ளார். இதனை அடுத்து 2024-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான போட்டியில் பாரிஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் புடாபெஸ்ட் ஆகிய நகரங்கள் மட்டுமே உள்ளன.

முன்னதாக ரோம் நகரில் 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இத்தாலி தெரிவித்திருந்தது. இதனிடையே ரோம் மாநகர மேயர் விர்ஜினியா இத்தாலி ஒலிம்பிக் கமிட்டியின் முடிவை ஆதரிக்கப் போவதில்லை என்று அறிவித்தார். இதே போல் 2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவும் வாய்ப்பு கோரிய இத்தாலி, அப்போதைய பிரதமர் மரியோ மான்டியின் முடிவினை அடுத்து போட்டியில் இருந்து விலகியது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close