[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

2016ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு: கொலம்பியா அதிபர் ஜுவன் மேனுவேல் சாண்டோஸ் தேர்வு

colombian-president-juan-manuel-santos-wins-nobel-peace-prize-2016

2016ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு கொலம்பியா அதிபர் ஜுவன் மேனுவேல் சாண்டோஸ்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை நார்வேயின் ஆஸ்லோ நகரில் நோபல் பரிசுக் குழு தலைவர் கேசி குல்மன் இன்று பிற்பகல் வெளியிட்டார். கொலம்பியா அதிபர் ஜுவன் மேனுவேல் சாண்டோஸ் அரை நூற்றாண்டு கால சண்டையை முடிவுக்கு கொண்டு வர பாடுபட்டவர் ஆவார். ஃபார்க் கிளர்ச்சியாளர்கள் உடனான அமைதி முயற்சியை பாராட்டும் வகையில் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு பெறும் இரண்டாவது கொலம்பியர் சாண்டோஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு 228 தனிநபர்களின் பெயர்கள் மற்றும் 148 அமைப்புகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு இருந்தன. சிரியாவில் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்துவரும் வொயிட் ஹெல்மட் அமைப்பினர், ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படக் காரணமானவர்கள் உள்ளிட்டவர்களுக்கு பரிசை வெல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகக் கூறப்பட்டது.

கொலம்பியாவின் ஆயுதக்குழுக்களும்- அமைதி முயற்சிகளும்....

வளம் நிறைந்த கொலம்பியாவின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருப்பது ஆயுதக் குழுக்களின் ஆதிக்கம். கம்யூனிஸத்துக்கு எதிராக அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகளின் பின்விளைவுகளுள் இதுவும் ஒன்று.

அரை நூற்றாண்டுக்கு முந்தைய கொலம்பியாவின் பொருளாதார, சமூக, அரசியல் ஏற்றத்தாழ்வுகள் சாதாரண மக்கள் மத்தியிலும் விவசாயிகளிடமும் அரசியல் அமைப்புக்கு எதிரான மனநிலையை உருவாக்கியிருந்தது. கம்யூனிஸம் ஒன்றே ஏற்றத்தாழ்வைத் அழித்து சமநிலையை உருவாக்குவதற்கான வழி என்று அவர்கள் நம்பினர். இத்தகையை எண்ணங்களால், கொலம்பியாவில் கெரில்லா ஆயுதக் குழுக்கள் தோன்றின. முறையான நிர்வாக அமைப்பு இல்லாத பகுதிகளில் இக்குழுக்களுக்கு மக்கள் ஆதரவு இருந்தது. இவற்றுள் முக்கியமானவை ஃபார்க் மற்றும் இஎல்என். இவை பெரும்பாலும் மார்க்சீயத்தை அடிப்படையாகக் கொண்டவை.

தென் அமெரிக்காவின் விடுதலைப் போராளியான சிமோன் போலிவார்-இன் தத்துவங்களை அடிப்படையாக கொண்டு, நில சுவான்தார்களை எதிர்த்து இவர்களது கிளர்ச்சி தொடங்கியது. கொலம்பியா நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கத் தலையீடு, இயற்கை வளங்கள் மீது சர்வதேச நிறுவனங்கள் கொண்டுள்ள ஆதிக்கம் ஆகிவற்றுக்கு எதிரானதாகவும் இந்தக் கிளர்ச்சி மாறியது. தங்களது பணத் தேவைக்காக ஆள் கடத்தலிலும் ஈடுபட்டனர்.

நாட்டில் கம்யூனிசம் பரவி விடக்கூடாது, குறைந்தபட்சம், கொலம்பியாவுக்கு வெளியே அதன் ஆதிக்கம் சென்றுவிடக்கூடாது என்பதற்காக அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி அரசுப் படைகளுக்கு உதவினார். இந்த நடவடிக்கை, போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள் வலுவடைவதற்கு மட்டுமே உதவியது. அமெரிக்காவில் இருந்து கொலம்பியாவைக் கட்டமைப்பதற்காக அனுப்பப்பட்டவர்கள் போதைப் பொருளை மத்திய அமெரிக்கப் பகுதிக்குக் கடத்துவதற்கான ஏஜெண்டுகள் போலச் செயல்படத் தொடங்கினர். அண்மைக் கால கணக்குப்படி கொலம்பியாவில் ஆயுதக் கிளர்ச்சியால் இரண்டே கால் லட்சம் பேர் உயிரிழந்திருக்கின்றனர். 50 லட்சம் பேர் இடம் பெயர்ந்திருக்கின்றனர்.

போதைப் பொருள் பயிரிடுவதைத் தடை செய்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், 2002-ஆண்டுக்குப் பிறகு ஃபார்க் உள்ளிட்ட செயல்பாடுகள் வெகுவாகக் குறைந்தன. மக்களும் ஆயுதக் குழுக்களுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தினர். 2012-ம் ஆண்டில் கொலம்பியா, ஃபார்க் ஆயுதக் குழுவுடனான பேச்சுவார்த்தையைக் கியூபாவில் தொடங்கியது. இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு, கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி கையெழுத்தானது. ஆனால் இந்த உடன்பாட்டை கருத்தறியும் தேர்தல் மூலமாக மக்கள் நிராகரித்திருக்கிறார்கள். இதனிடையே ஃபார்க் கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியை நிலைநாட்ட முயற்சித்ததில், கொலம்பியா அதிபர் ஜுவன் மேனுவேல் சாண்டோஸின் பங்கு மிகப்பெரியதாகும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close