[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS குழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS 2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS தமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி

பாகிஸ்தானுக்கு சாலை அமைக்கும் சீனா..... கவலை தெரிவித்தார் பிரதமர் மோடி

pm-modi-meet-china-s-xi-jinping-in-g20

பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் வழியாக சீனா பொருளாதார நெடுஞ்சாலை அமைப்பது குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

சீனாவில் ஜி 20 நாடுகளின் மாநாட்டிற்கு சென்றிருந்த மோடி, அந்நாட்டு அதிபர் சி சின்பிங் - கை சந்தித்து பேசினார். பாகிஸ்தானுக்கு சீனா அமைத்து வரும் நெடுஞ்சாலையால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படும் என மோடி கவலை தெரிவித்தார். இரு நாடுகளும் பரஸ்பர நலனில் அக்கறை கொண்டிருக்க வேண்டும் என்றும் ‌சீன அதிபரிடம் மோடி வலியுறுத்தினார். இதற்கிடையில் அமெரிக்க அதிபர் ஒபாமா, ஆஸ்திரேலிய பிரதமர் டர்ன்புல் ஆகியோரை மோடி சந்தித்தார். இங்கிலாந்து பிரதமர் தெரசா மே - வை மோடி நாளை சந்திக்க உள்ளார்.

முன்னதாக ஜி 20 நாடுகளின‌ கூட்டத்தில் பேசிய மோடி, உலகம் தற்போது அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்தார். முக்கிய பிரச்னைகளுக்கு நடவடிக்கைகள் சார்ந்த கொள்கைகள் வகுக்க வேண்டும் என உலகத் தலைவர்களுக்கு மோடி வலியுறுத்தினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close