[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

‌தமிழகத்தில் ரூ.3,229 கோடி செலவில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

tn-assembly-2016-chief-minister-jayalalithaa-announces-schemes-worth-rs-3-229-crore

புத்துணர்வு மற்றும் நகர்ப்புற மாற்றங்களுக்கான அட்டல் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் ‌3ஆயிரத்து 229 கோடி ரூபாய் செலவில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில், விதி எண் 110ன் கீழ், நகர்ப்புறங்களில் செயல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்கள் குறித்து அவர் அறிவித்தார்.

அப்போது பேசிய அவர், சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, திருப்பூர், தஞ்சை மற்றும் வேலூர் ஆகிய 7 மாநகராட்சிகளிலும், நாகர்கோவில், ராஜபாளையம், ஆம்பூர், ஒசூர் ஆகிய நான்கு நகராட்சிகளிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். அனைத்து நகராட்சிகளிலும் உள்ள தெரு விளக்குகள் எல்இடி விளக்குகளாக மாற்றப்படும் என்றும், 320 கோடி மதிப்பீட்டில் தனியார் மற்றும் அரசின் பங்களிப்புடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று‌‌ அவர் கூறினார். திருச்சி மாநகராட்சி மற்றும் 36 நகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் 116 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த‌ப்படவிருப்பதாகவும் முதலமைச்சர் அறிவித்தார். மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஜெர்மன் வங்கி நிதியுதவியுடன் 91 கோடியே 70 லட்சம் செலவில் பாதாளச் சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும், இதன் மூலம், பவானி ஆற்றில் கழிவு நீர் கலக்கப்படுவது தடுக்கப்படும் எனவும் ஜெயலலிதா தெரிவித்தார். ‌ திறந்தவெ‌ளியில் மலம் கழிப்பதை தடுக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த 57 கோடி ரூபாய் செலவில் பணிகள் மே‌ற்கொள்ளப்படும்‌ என்றும் அவர் அறிவித்தார். தூத்துக்குடி மாந‌ராட்சிப் பகுதியில் வெ‌ள்ளநீர் ‌வெளியேற 7‌3 கோடி ரூபாய் செலவில் ‌மழை நீர் வடிகால் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதேபோல் கடலூரில், 39 கோடி ரூபாய்‌‌ மதிப்பீட்டில் மழை‌நீர் வடிகால் திட்டம் செயல்படுத்தப்படும் என‌வும் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close