[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி

பேரவையில் இன்று: கூட்டுறவு,உணவுத்துறை மானியக்கோரிக்கை மீது விவாதம்

tn-assembly-meeting-today

சட்டப்பேரவையில் துறைவாரியான மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. முதல்நாளான இன்று, கூட்டுறவு மற்றும் உணவுத்துறைக்கான மானியக்கோரிக்கை மீது விவாதம் நடைபெறவுள்ளது. உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் பதிலளிக்க உள்ளனர்.

துறைரீதியான சில அறிவிப்புகளும், விதி எண் 110ன்கீழ் முக்கிய அறிவிப்புகளும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டப்பேரவையில் கடந்த வெள்ளியன்று நடந்த பட்ஜெட் விவாதம் மீதான பதிலுரையை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. இந்த சூழலில், மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்கும் எதிர்க்கட்சிகள், துறைரீதியாக பல்வேறு கேள்விகளை முன்வைக்கும் என கூறப்படுகிறது. அ‌தேநேரத்தில் பாலாறு தடுப்பணை பிரச்னை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்தும் கேள்வி எழுப்பப்படலாம் என தெரிகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close