[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

சோலார் பேனல் மோசடியில் திமுக முன்னாள் அமைச்சருக்கு தொடர்பு: சரிதா நாயர் பேட்டி

ex-dmk-minister-involved-in-kerala-solar-panels-scam-saritha-nair

சோலார் பேனல் மோசடி வழக்கில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கத்திற்கு தொடர்பு இருப்பதாக, அவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண் தொழிலதிபர் சரிதா நாயர் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு சோலார் பேனல் அமைத்து தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக பெண் தொழிலதிபர் சரிதா நாயர் கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளியே உள்ள அவர் மீது, கோவையில் காற்றாலை அமைத்துத் தருவதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக வழக்கு உள்ளது.அந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக சரிதா நாயர் கோவை வந்தார்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், சோலார் பேனல் மோசடி தொடர்பாக கேரள அரசு அமைத்துள்ள கமிஷினடம் அனைத்து ஆதாரங்களையும் கொடுத்திருப்பதாகக் கூறினார்.

கேரளா முதலமைச்சர் உம்மன் சாண்டி உட்பட 9 பேர் மீதான ஆதாரங்களை கொடுத்திருப்பதாகக் சரிதா நாயர் குறிப்பிட்டார். திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனி மாணிக்கத்திற்கும் இந்த மோசடியில் தொடர்பிருப்பதாகக் சரிதா நாயர் குற்றம்சாட்டினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close