[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் நகலை இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கிழித்ததால் பரபரப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு
  • BREAKING-NEWS 2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கிருக்கிறார்? - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS மக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது

''சிலைக் கடத்தல் வழக்கு ஆவணங்களை விரைவில் தருகிறேன்'' பொன்.மாணிக்கவேல்

idol-cases-documents-will-be-provided-soon-says-pon-manickavel

சிலைக் கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை விரைவில் வழங்குவதாக, அப்பிரிவின் சிறப்பு அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

Image result for pon manickavel"

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேலின் பதவிக்காலம் கடந்த வாரம் நிறைவடைந்தது. இதையடுத்து ஆவணங்களை ஒப்படைக்குமாறு அவருக்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தது. ஆனால், உச்சநீதிமன்றம் தம்மை சிறப்பு அதிகாரியாக நியமித்ததால் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பிக்காமல் ஆவணங்களை தர முடியாது என்று பொன் மாணிக்கவேல் பதில் கடிதம் எழுதியிருந்தார். 

Image result for pon manickavel"

இந்நிலையில், ஆவணங்களை ஒப்படைக்குமாறு அவருக்கு கடந்த திங்கள்கிழமை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, ஆவணங்களை ஒப்படைக்குமாறு, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏ.டி.ஜி.பி. அபய்குமார் சிங் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள பொன் மாணிக்கவேல், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க தன்னால் விசாரிக்கப்பட்ட வழக்குகளின் ஆவணங்களை ஒருங்கிணைக்கும் பணிகள் முடிந்தவுடன் சி.டி. வடிவில் விரைவில் வழங்குவதாக தெரிவித்துள்ளார். மேலும், நீதிமன்ற உத்தரவுகளை மதிப்பது தனது கடமை என்றும் கடிதத்தில் பொன் மாணிக்கவேல் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close