[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

‘ஆரஞ்ச் அலர்ட்’ மற்றும் 'ரெட் அலர்ட்' என்றால் என்ன? 

what-is-red-alert-weather-department-explained

தமிழகத்தில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருகிறது. மழையையொட்டி விடப்படும் ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட்  என்றால் என்ன? வேறு என்னென்ன அலர்ட் உள்ளன? 

கனமழை தொடர்பாகவும் அது குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை கணக்கிட்டும் அந்ததந்த பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கிறது. அந்த வகையில் ரெட் அலர்ட், ஆம்பர் அலர்ட், யெல்லோ அலர்ட், க்ரீன் அலர்ட் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. 

இதில், வானிலை மிகவும் மோசமாக இருக்கும் என கணக்கிடப்படுவது ரெட் அலர்ட் என அறிவிக்கப்படுகிறது. இந்த அலர்ட் விடுக்கும்போது, மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைய வேண்டும், பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பு, சாலை வசதிகள் துண்டிக்கப்படும். உள்ளூர் நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி அபாயகரமான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்பவையாகும். 

அடுத்ததாக ஆம்பர் என்ற அலர்ட் முறை கணக்கிடப்படுகிறது. இந்த எச்சரிக்கையின்போது வானிலை மோசமடைய அதிக வாய்ப்புள்ளதாகவும், சாலை, மின் இணைப்பு சில இடங்களில் துண்டிக்கப்படும் எனவும் இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் அதிக சேதங்கள் ஏற்படும் என்பதால் மக்கள் வேறு இடத்திற்கு செல்ல தயாராக இருக்க வேண்டும் என்பவையாகும். 

இதேபோல், அடுத்த சில நாட்களில் வானிலை மோசமாக வாய்ப்பு உள்ளது என்பதை எச்சரிக்கைகும் வகையில் யெல்லோ அலர்ட் விடுக்கப்படும். இந்த அறிவிப்பின்போது, அந்ததந்தப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்படும். அடுத்த சில நாட்களில் வானிலையில் சாதகமற்ற நிலை உருவாக வாய்ப்புள்ளதை என்பதை குறிக்கும் வகையில் யெல்லோ அலர்ட் விடுக்கப்படும். அடுத்ததாக எந்த எச்சரிக்கையும் கிடையாது என்பதை விளக்கும் அறிவிப்பு க்ரீன் அலர்ட் ஆகும். ஒருசில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டால் ஆரஞ்சு அலர்ட் விடப்படும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close