[X] Close
JUST IN
  • BREAKING-NEWS முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்
  • BREAKING-NEWS குன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலில், இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச முன்னிலை

ரூ.300 கோடி வரை வருமானவரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு: ஜெகத்ரட்சகனிடம் இன்றும் விசாரணை

income-tax-officer-2nd-day-enquery-to-dmk-ex-mp-jagathrakshakan

வருமான வரிஏய்ப்பு தொடர்பாக, திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய கல்வி குழுமங்கள், மதுபான தயாரிப்பு ஆலைகள் வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த புகாரின் அடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள் 3 நாட்களாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். ஜெகத்ரட்சகனின் வீடு, அலுவலகம், கல்விக்குழுமங்கள், மதுபான தயாரிப்பு ஆலைகள் என தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நீடிக்கிறது. ஜெகத்ரட்சகனிடம் நேற்று நடத்திய விசாரணையை அடுத்து வரிஏய்ப்பு தொடர்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய அலுவலங்களில் முக்கிய பொறுப்பு வசித்துவரும் பணியாளர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றுவருகிறது. நிதிமேலாண்மையில் தொடர்புடைய பணியாளர்களிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை கணக்கில் வராத 15 கோடி ரொக்கம் பறிமுதல் செய்துள்ளதாகவும், சுமார் 300 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close