[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் - அமைச்சர் காமராஜ்
  • BREAKING-NEWS மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான விருதை காண்பித்து வாழ்த்துப்பெற்றார் திருச்சி சிவா
  • BREAKING-NEWS எனது விளக்கத்தை ஏற்று என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்
  • BREAKING-NEWS என் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS நாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

கம்பவுண்டர் ஆக பணியாற்றிவிட்டு மருத்துவம் பார்த்தவர் கைது

fake-doctor-arrested-in-namakkal

நாமக்கல் மாவட்டத்தில் கம்பவுண்டர் வேலை பார்த்துவிட்டு மக்களுக்கு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படை பகுதியில் வசிப்பவர் மணிவண்ணன் (40). 12ஆம் வகுப்பு படித்த இவர், எடப்பாடி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 26 ஆண்டுகளாக கம்பவுண்டர் ஆக பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஒரு வருடமாக வேலையிலிருந்து நின்றுவிட்ட மணிவண்ணன், வெப்படை அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். அதுமட்டுமின்றி அப்பகுதியினருக்கு மருத்துவமும் செய்து வந்துள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் எலந்தகுட்டை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புகார் அளித்துள்ளனர். 

அதன் அடிப்படையில் எலந்தகுட்டை ஆரம்ப சுகாதார மருத்துவமனையின் மருத்துவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது மணிவண்ணன் அவர் போலி மருத்துவராக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து நாமக்கல் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சாந்தியின் உத்தரவின்பேரில், குமாரபாளையம் தலைமை மருத்துவர் அருண் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தார். பின்னர் மணிவண்ணனை பள்ளிபாளையம் போலீசார் கைது செய்தனர். தற்போது அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close