சென்னை கொளத்தூரில் தகாத உறவு விவகாரத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொளத்தூர்- ரெட்டேரி சிக்னல் அருகே நேற்றிரவு இளைஞர் ஒருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொன்றுவிட்டுத் தப்பியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராஜமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி கீழ்பாக்கம் மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் நடந்த விசாரணையில், கொல்லப்பட்டவர் சிட்லபாக்கம் வேங்கைவாசல் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அன்வர் பாட்ஷா (31) என்பது தெரியவந்தது. இவர் லட்சுமி என்ற பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்ததாகவும் இதனால் லட்சுமியின் மகன் அஜித்துக்கும் பாட்ஷாவுக்கும் பிரச்னை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றிரவு தனது அம்மா மெகபூபா மற்றும் லட்சுமியுடன் ஆட்டோவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார் பாட்ஷா. அப்போது அங்கு வந்த அஜித் மற்றும் அவர் நண்பர்கள் பெரிய அஜித், அஷ்வின் ஆகியோர் சேர்ந்து பாட்ஷாவை சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியுள்ளனர்.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.
திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஹோட்டலில் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு..?:சென்னை உயர்நீதிமன்றம்
சலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..!
“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்
உன்னாவ் கொடூரம்... சிகிச்சைப் பலனின்றி பெண் உயிரிழப்பு...
ஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்!
சலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..!
“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்
“தோனி..தோனி என ரசிகர்கள் கத்தட்டுமே.. பழகிக் கொள்ளுங்கள் ரிஷப்” - கங்குலி அட்வைஸ்
‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’- திரைப் பார்வை