ஆண்டிபட்டி அருகே நிலத்தகராறில் அண்ணனை சுத்தியலால் தாக்கி கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியருகே உள்ள கருப்பத்தேவன் பட்டியை சேர்ந்த மாயாண்டித்தேவர் என்பவரின் மகன் போஸ் (வயது40). இவருடைய சித்தப்பா தெய்வம் என்பவரின் மகன் குமார் (வயது25). அண்ணன் தம்பி முறையுள்ள இருவரும் கருப்பத்தேவன்பட்டியில் ஒரே தெருவில் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர்.
அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே பூர்விக நிலத்தில் பாகம் பிரிப்பது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. நிலப்பிரச்சினை தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுசம்பந்தமாக இருவரும் ஏற்கெனவே தேனிமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் தனித்தனியே ஒருவர் மீது ஒருவர் அளித்த புகாரில் கடந்த சில மாதங்களாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று இருவருக்கும் இடையே மீண்டும் நிலப்பிரச்சனை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது குமார் தான் வைத்திருந்த சுத்தியலை எடுத்து அண்ணன் போஸின் தலையில் கடுமையாக தாக்கியதில் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் போஸ் மயங்கி விழுந்தார். இதையடுத்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே போஸ் பரிதாபமாக இறந்தார்.
இச்சம்பவத்தையடுத்து போஸின் மனைவி ஜான்சி க.விலக்கு காவல்நிலையத்தில் செய்த புகாரையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிலத்தகராறில் அண்ணனை சுத்தியலால் தாக்கி தம்பியே கொலை செய்த சம்பவம் ஆண்டிபட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
உள்ளாட்சி தேர்தல் : நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வா? - தமிழக அரசு விளக்கம்
“நான் வெஜிடேரியன், வெங்காயத்தை சாப்பிட்டதேயில்லை” - மத்தியமைச்சர் அஷ்வினி சௌபே
நாடாளுமன்ற கேண்டீனில் எம்பிக்களுக்கு மலிவு விலையில் உணவு கிடையாது
9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் : உச்சநீதிமன்றம் கருத்து
பின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு!
மரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்? - போலீசார் விசாரணை
மின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..!
கைலாசம் தீவுக்கு செல்ல விசா எடுக்கும் வழிமுறைகள் என்ன? - அஸ்வின் கிண்டல்