புதுக்கோட்டையில் காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மூன்று பேர் காயம் அடைந்தனர்.
புதுக்கோட்டை அருகே திருமயத்தைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவர், தாய் -தந்தையுடன் வேளாங்கண்ணிக்கு காரில் சென்றுக் கொண்டிருந்தார். அறந்தாங்கி அருகே அவர்களது கார் சென்றபோது, மணமேல்குடியைச் சேர்ந்த நடேசன் என்பவர், இருசக்கர வாகனத்தில் எதிரே வந்துள்ளார். அப்போது, காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில், கார் நிலைத்தடுமாறி அருகில் இருந்த மரத்தில் மோதி நின்றது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஸ்டாலினும், அவரது தாயும் காயங்களுடன் உயிர் தப்பினர். ஸ்டாலினின் தந்தை பாக்கியராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் வந்த நடேசன், கை, கால்கள் முறிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஹோட்டலில் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு..?:சென்னை உயர்நீதிமன்றம்
சலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..!
“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்
உன்னாவ் கொடூரம்... சிகிச்சைப் பலனின்றி பெண் உயிரிழப்பு...
ஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்!
சலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..!
“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்
“தோனி..தோனி என ரசிகர்கள் கத்தட்டுமே.. பழகிக் கொள்ளுங்கள் ரிஷப்” - கங்குலி அட்வைஸ்
‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’- திரைப் பார்வை