கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றுபவர் உத்தராம்பாள். இவர் பணி முடித்து புதுவையை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர் முன்பாக செல்போன் பேசியபடியே இருசக்கர வாகனத்தில் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அந்த இளைஞரை வழிமறித்து செல்போனை பறிமுதல் செய்த எஸ்.ஐ. காவல் நிலையத்தில் வந்து செல்போனை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். அந்த இளைஞர் காவல்நிலையம் சென்று பார்த்தபோது, அந்த எஸ்.ஐ. அங்கு இல்லை எனவும் புதுவை மாநிலத்தில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்று விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மாலை மீண்டும் உத்தராம்பாள் பணிக்கு வந்துள்ளார். இதையறிந்த அந்த இளைஞர் அவரது நண்பர்கள் சிலருடன் செல்போனில் கேமராவை ஆன் செய்து கொண்டு காவல்நிலையம் உள்ளே சென்றுள்ளார். அப்போது, அந்த இளைஞர் மற்றும் நண்பர்களை பெண் எஸ்.ஐ மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக செல்போனில் பதிவு செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், நான் செய்தது தவறுதான். அதற்க்கு வருத்தம் தெரிவித்தேன். ஆனால் நீங்கள் செல்போனை பறிமுதல் செய்துகொண்டு காவல் நிலையத்திற்கு வராமல் வீட்டுக்கு ஏன் எடுத்து சென்றீர்கள். நீங்கள்கூடத்தான் தலைகவசம் அணியாமல் சென்றீர்கள் என அந்த இளைஞர் கேள்வி எழுப்புகிறார்.
மேலும், அவருடன் வந்த நண்பர்களும் செல்போனை எப்படி பிடுங்கலாம். அபராதம் போடவேண்டியது தானே என கேள்வி எழுப்பினர். இதைக்கேட்ட பெண் உதவி ஆய்வாளர், நீ யாரு. உனக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம். வெளியே போ. இது என் காவல்நிலையம் என அந்த நண்பர்களை பார்த்து கத்துகிறார். இது மக்களுக்கான இடம் என்று அவர்கள் கூற நீ கலெக்டர்கிட்ட போய் சொல்லு; இல்ல யாருகிட்ட வேண்டுமானாலும் போய் சொல்லு, எனக்கு பயம் இல்லை என மிரட்டுகிறார். இந்த வீடியோ சமுக வளைதளங்களில் வைரலாக பரவி தொடங்கியுள்ளது.
உன்னாவ் வன்கொடுமை: அமைச்சர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்... விரட்டியடித்த போலீஸ்..!
ரஜினியின் வேண்டுகோள் முதல் தமிழக வீராங்கனைக்கு கிடைத்த தங்கம் வரை...! #TopNews
நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்!
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்
"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்" ப.சிதம்பரம் சாடல்